This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

19 மே, 2009

தலைவருக்கு வீர வணக்கம்! படையினருக்கு நன்றிகள்! ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்! -கிழக்கான் ஆதம்-

ஈழ மக்களின் போராட்ட வரலாற்றை திசைதிருப்பிய மாபெரும் மனிதர் சில தினங்களுக்கு முன் தனது முடிவை நிரூணயித்துக் கொண்டார். தனியாக தமிழருக்கு நாடு பெற்றுத் தருவதாக கூறிய இவர் இன்று தமிழர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து நடைபிணங்களாக அவர்களை மாற்றிவிட்டு போராடி உயிர்நீத்தார்.

வீரவணக்கம்
படுகொலைக் கலாச்சாரத்தை தமிழருக்குள் விதைத்து இன முரண்பாடுகளைத் தூண்டி இலங்கை மக்களை தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் என பாகுபடுத்தி  பேதமேற்படுத்திய ஜனநாயகவாதிக்கு வீரவணக்கம்.
வாசலில் மண்கூட்டி நேசத்துடன் கைகோர்த்து பாசத்துடன் பழகிய சின்னம் சிறுசுகளை இரத்த வாசத்துடன் இறுகிய உள்ளத்துடன் இயங்கவைத்துக் கொண்டிருந்த இயந்திர துப்பாக்கிதாரிக்கு எங்கள் வீரவணக்கம்

பாடசாலைகளில் பாடம் கற்கச் சென்றவர்க்களைப் பிடித்துப் புத்தகங்களைப் பறித்து துப்பாக்கிகளைத் திணித்து கல்விச்சோலைகளை செஞ்சோலையாக மாற்றிய பகுத்தறிவுவாதிக்கு எங்கள் வீர வணக்கம்
வீரராகப் பிறந்து புத்திசாலிகளாக வளர்ந்து சிங்கங்களாக கர்சித்த எம் சமூதாயத்தை அடிமைகளாக பிடித்து மடையர்களாக வளர்த்து எலிகளாக எங்கும் திக்குமுக்காடச்செய்த தீரருக்கு வீர வணக்கம்
சமூதாயச் சீர்திருத்தங்கள்  செய்து பல்லினமக்கள் வாழ்ந்த வடகிழக்கில் ஓரினமக்கள் கூட வாழத் தகுதியில்லை எனக் கூறி தங்கள் புலியினம் மட்டும் படாடோபமாக வாழ பாலமமைக்கப் பார்த்த பாசிச வாதிக்கு எங்கள் வீர வணக்கம்
மாட்டுமந்தைகள் என்று  சொல்லி மாட்சிமைமிக்க முஸ்லீம்களை வீட்டுக்கொருபலி வீதிக்கொரு கொலை ஊருக்கொரு சுத்திகரிப்பு எனச் செய்த சுத்துமாத்துக் காரருக்கு வீரவணக்கம்
இருக்கும் காணியில் அரைவாசி மட்டுமே  உழைத்து பெற்ற பிள்ளையில் வீட்டுக்கொன்றைத் தத்துக்கொடுத்து படலைக்கு இரண்டு விதவைகள் உறுவாக்கிய பஞ்சமா பாதகருக்கு வீர வணக்கம்
வீடொன்று கட்டினால் ஐம்பதுவீதம் புலம்பெயர்திருந்தால்  மாதத்துக்கு சில இலட்சம் மத்தியகிழக்கில் உழைத்தால் உழைத்ததில் அரைவாசி கார் வாங்கினால் முதல் மாதம் மொத்த்த்தில் முற்பதுவீதம் மோட்டார் சைக்கில் வாங்கினால் ஒடும்போது வழிப்பறியென பைனாஸ் நடத்திய கலக்சன்வாதிக்கு வீர வணக்கம்
வீட்டுக்குள் சாத்வீகம் பங்கருக்குள் டாம்பீகம் காட்டுக்குள் பூர்வீகம் மக்களுக்குள் வீராவேசம் படித்தவருக்கு நெற்றியில் பொட்டு பாமரருக்கு டம்ளரில் கஞ்சி தன்பிள்ளைகளுக்கு வெளிநாட்டில் கல்வி என வழங்கிய சோசலிச வாதிக்கு வீர வணக்கம்
வாழ்வதோ சொகுசுவாழ்கை சுவாசிப்பதோ ஐரோப்பிய பணக்காற்று குடிப்பதோ சுத்த பழரசம் குளிப்பதோ மேட்கத்தேய குளியல் தொட்டி பிரயாணம் செய்வதோ அதியுயர் சொகுசுக்கார் என வாழ்ந்த மக்கள் போராளிக்கு வீர வணக்கம்
அரசியல் சாக்கடை அதில் நுழைந்தால் புலிக்கிரை நாளை தமிழர் படை எங்களின் எழுச்சி பொங்குதமிழ் எங்களை எதிர்த்தால் போகும் உயிர் புலிகள் தவிர்ந்த அனைவரும் துரோகி என்று சீறிய புலிக்கு எங்கள் வீர வணக்கம்.

நன்றிகள்
நன்றிகள் நன்றிகள் மனமார்ந்த நன்றிகள் தங்கள் பகைவரை வென்று பகைமையை நீக்கி நிகழ்கால உலகிற்குள் எங்களையும் இணைத்துவிட்ட இலங்கையின் படைவீர்ர்களுக்கு நன்றிகள்.
புலிகள் எனும் பாசிசவாத்த்தை அடியோடு  அழித்து மக்கள் ஜனநாயக வாதத்தை மகிழ்வோடு அழித்த எங்கள் அன்புக்கு உரித்தான படையினருக்கு நன்றிகள்
குழந்தைகளை மீட்டு பெரியவர்களைக் காத்து தங்கள் உதிரத்தை சிந்தி மக்கள் உதிரத்தைத் துடைத்த மாபெரும் வீர்ர்களுக்கு நன்றிகள்
உயிர் விலை அறியா மூடன் உணர்வின் வலியை தெரியா அசுரன் புலியாய் பாய்ந்து மக்களை கிழியாய் கிழிக்க எவ்வலியையும் தாங்கி தங்களை உயிர்களை துச்சமன மதித்து மக்களை மீட்ட சிங்கள மஹத்தயாக்களுக்கு கோடி நன்றிகள்
குடும்ப பாரத்தை துச்சமாக நினைத்து நாட்டின் விடுதலைக்காக போராடி பாசிசப் புலிகளை முற்றாக அழிக்க தங்கள் உயிர்களை துறந்த விடுதலை வீர்ர்களுக்கு என்கள் உள்ளம் கனிந்த நன்றிகள்
நாட்டுமக்கள் நிம்மதியாக் தூங்க தங்கள் தூக்கத்தை இழந்து மக்கள் சுதந்திரமாக சுவாசிக்க தங்களின் சுவாசத்தை இழந்த வீராதி வீரர்களுக்கு நன்றிகள்
நாட்டின் துயரைத்துடைக்க தங்கள் துயரத்தை மறந்து உதிரத்தை இழந்து தங்கள் உடல் அவயங்களை இழந்து நாட்டை மீட்டோம் என்ற நம்பிக்கையுடன் நாளை ஒளிவீசப் போகும் புதிய இலங்கையை தள்ளிநின்று ரசிக்கப்போகும் இலங்கை முப்படைகளுக்கும் நன்றிகள்.

வாழ்த்துக்கள்.
வாழ்த்துகிறோம் வாழ்த்துகிறோம் மண்ணின் மைந்தன் கௌரவ. ஜனாதிபதி மகிந்த ராஜபச்சவை வாழ்த்துகிறோம்.
பூலோக சுவர்கமான இலங்கைத் திருநாடு நரகமானபோது அதனை மீண்டும் சுவர்கமாக மாற்ற துணிச்சலுடன் போராடிய வீரன் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்.
பாவப்பட்ட மக்கள் பட்டினியில் வாழ்ந்த மக்கள் சிறைப் பிடிக்கப்பட்ட மக்கள் எல்லோரையும் தீவிரமாக மீட்ட தீரன் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
புண்ணிய பூமி தீவிரவாத்த்துக்குள் புதைந்திருந்தபோது அதனை தோண்டி புதியதாய் மாற்றிய புண்ணியவான் ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
அரசியல் படுகொலைகளுக்கும் தற்கொலைத் தாக்குதல்களுக்கும் பெயர்பெற்ற தேசத்தை இன்றைய உலகிற்கு சமமாக தூக்கியுயர்திய சாதனையாளர் ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
பஸ்ஸில் குண்டு வெடிப்பு விபசாயி சுட்டுக் கொலை வீதியில் கன்னிவெடிகள் என்ற வீரதீரச் செயல்களுக்கு வீரத்துடன் பிரியாவிடையளித்த ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
சிறுவர் துன்புறுத்துவோர் சிகரட் புகைப்பவர்கள் மதுவுடன் வீதியிலலைவோர் அனைவரையும் கட்டுப்படுத்தி இலங்கையரை உயர்த்திக் காட்டிய சீர்திருத்தவாதி ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
மேட்கத்தைய மோகத்தையும் மேட்கத்தைய மேல்நிலை வாதத்தையும் மேட்கத்தைய சீருடையற்ற பொலீஸ் காரர்களையும் கவனமாய் கணக்கெடுத்து மிகவும் கண்ணியமாக நடக்கச் சொன்ன இலங்கையின் முதல்பிரஜை ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்
 மறைந்த பிரபாகரனுக்கு வீரவணக்கம்! நாட்டைக் காப்பாற்றிய படையினருக்கு நன்றிகள்! அம்பாந்தோட்டை பெற்றெடுத்த அருந்தவப் புருஷனுக்கு வாழ்த்துக்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக