This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

29 ஏப்ரல், 2009

பன்றிக் காய்ச்சல் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine influenza) -கிழக்கான் ஆதம்-

“Thou shall not kill. Thou shall not commit adultery. Don't eat pork. I'm sorry, what was that last one?? Don't eat pork. God has spoken. Is that the word of God or is that pigs trying to outsmart everybody?”
-Jon Stewart  American Actor and Comedian(1962)- 

இன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் பன்றிகளில் இருந்து தோன்றி இன்று மனிதர்களின் உடலை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான பன்றிப் பன்னைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப் பட்டுவருகின்றன.

28 ஏப்ரல், 2009

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்-

“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது” 

-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

நேற்றைய தினம் இருபத்தி ஆறாம் திகதி விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் வேண்டுகோள்களை ஏற்று ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் அவர்கள் இனி எப்போதும் வலிந்த தாக்குதல் எதையும் மேற்கொள்ள போவதில்லை (முடிந்தால் செய்யமாட்டார்களா? என்ன?) எனவும் காலவரையரையற்ற முறையில் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

22 ஏப்ரல், 2009

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? -கிழக்கான் ஆதம்-

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! (நல்வழி, ஓளவையார்)

இலங்கையின் தமிழர்கள் வரலாற்றையும் புலிகளின் போராட்ட யுக்தியையும் நாம் நோக்குவோமானால் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றிருக்க அதுவே தமிழரின் தாகமா என்றால் “இல்லை” என்றுதான் சொல்ல முடியும்.

தமிழரின் தாகம் என்னவாக இருந்தது என்று நீங்கள் அறிய முற்படுவீர்களானால் நீங்கள் தமிழ்பேசும் அனைத்து சமூகங்களும் ஒன்றினைந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் பிரதேசத்தில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் அவர்களின் வாழ்வியல் வரலாற்றையும் வைத்தே அதனை அறிய முடியுமே தவிர தனியே புலிகள் எனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் சுயநலக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் அதற்குள் அடக்கிவிட முடியாது.

இதுரை காலமும் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று அவர்கள் சொன்னார்களே தவிர அவர்கள் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொல்லவில்லை இது சாதாரணமாக பார்ப்பதற்கு பெரிதாக தெரியாவிட்டாலும் கூர்ந்து நோக்குவோமாயின் அன்று சகோதர படுகொலை முதல் இன்று வன்னிமக்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது வரை அனைத்தும் இக்கோஷத்துக்குள் அடக்கப்பட்டிருப்பதை காண முடியும்.

புலிகளின் கொடி ஈழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சமூக கலாச்சார விழுமியங்கள் எதனையும் பிரதிபலிக்காது தனியே புலிகள் எனும் அமைப்பையும் அவர்களின் சர்வாதிகார போக்கையும் பிரதிபலிப்பது போலவே புலிகளின் கோஷமும் அந்த அமைப்பின் சுயேற்சை அதிகாரத் தன்மையை மட்டுமே வெளிக்காட்டுகிறது.காரணம் அவர்களின்  கொடியாயினும் சரி மற்றும் அவர்களின்  கோஷமாயினும் சரி எதுவும் ஈழப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரதிபலிப்பாக எப்போதும் இருக்கவில்லை.

உலகில் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனமாக கருப்பு இன மக்கள் இருக்கின்றனர் சில தசாப்தங்களுக்கு முதல் நாங்கள் நோக்குவோமானால் உலகில் எல்லாத் திசைகளிலும் இம்மக்கள் தங்கள் தோலின் நிறம் கறுப்பு என்பதற்காக மிகவும் கீழ்தரமாக நடத்தப்பட்டனர்.

அப்படிப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவர்களில் “வண.மாட்டின் லூதர் கிங்கும்” தற்போதைய நமது காலத்தில் “நெல்சன் மன்டேலாவும்” உள்ளனர். வண.மாட்டின் லூதர் கிங் மறைந்துவிட்டாலும் அவரின் கனவு அமெரிக்காவில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. 

அதேபோல்  இருபத்தேழு வருடங்கள் கறுப்பர்களின் உரிமைகளுக்காக ரோபன் தீவிலுள்ள (Robben Island) சிறையில் தனது வாழ்கையின் இளமைக்காலத்தை கழித்த  மதிப்பிற்குரிய நெல்சன் மன்டேலாவும் கறுப்பர்களை வட அபிரிக்காவில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

நெல்சன் மன்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்ட காலத்திலும் சரி அவர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்ட காலத்திலும் சரி தங்களின் கொடியில் போராட்டத்தின் தன்மையினையும் தங்களின் தனிப்பட்ட ஆளுமையும் பிரதிபலிக்காத வண்ணம் மிகவும் நேர்த்தியாகவே அமைத்திருந்தனர். ஜொன் டூபி(John Dube) உற்பட முன்னால் தலைவர்களின் வழிகாட்டல்களில் அமைந்திருந்த சில அமைப்புக்கள் 1923ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்று ஒரு விடுதலை இரானுவ அமைப்பாகவே (Umkhonto we Sizwe) “தேசத்தின் ஈட்டி” என்ற பெயரில்  1961ம் மாற்றம் பெற்றிருந்தது.

இவ்வாறான காலப் பகுதியிலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் பழைய தலைவர்களால் கண்டறியப்பட்ட மூன்று நிறங்களைக் கொண்ட கறுப்பு(மக்களின் நிறம்) பச்சை(வளமிக்க மண்) மஞ்சல் (நாட்டின் செல்வம்) என அப்படியே பேணப்பட்டு வந்தது.

ஆனால் தமிழீழத் தேசிய கொடியை நோக்கினால் அதிலுள்ள மஞ்சல்- நிறம் தமிழீழ தேசிய இனம் தன்னாட்சி அமைத்துக் கொள்ள விழைவதும் நடத்தும் போராட்டம் அறத்தின்பாற்பட்டது நியாயமானது என்பதை குறிப்பதாகவும்

சிகப்பு- தேசியம் அமைத்தால் மட்டும் போதாது தங்களுக்கு எதிரான அனைவரையும் பழிவாங்குவதுடன் சாதிய  வகுப்புவாத முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பதையும்

கறுப்பு- விடுதலைப்பாதை கரடு முரடானது அதில் தலைவரும் அந்த அமைப்பும் செய்யும் தீங்குகளையும் மக்கள் மீது செய்யத் தூண்டிவிடும் தீங்குகளையும் மக்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும்

வெள்ளை- விடுதலை அமைப்பும் தலைவர்களும் மக்களும் உண்மையையும் நேர்மையையும் கடைப்படிக்க வேண்டும் என்பதையும் குறிக்கின்றது.

அதனால்தானோ என்னவோ! மக்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் பல சிக்கலான நடைமுறைகளுடன் அடிமைகளைப்போல நடத்தப்பட்டனர். மட்டுமல்லாது புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் தாயக்திற்கு தமது உறவுகளுடன் சில நாட்களை கழிக்க வந்தபோதுகூட பல சாட்டுப் போக்குகள் சொல்லி சிறையிடப்பட்டு பின்னர் சுளையாக பணம் பறிமாறப்பட்டபோது விடுதலை செய்யப்பட்டனர்.

போதாக்குறைக்கு தமிழீழ தேசிய கொடியில் பிரதிபலிக்கும் வெள்ளை நிறத்தின் கொள்கைக்கு சாட்சியாக வன்னியில் தங்களை மட்டும் நம்பி வாழ்ந்த மக்கள் சிறைப்படிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

ஒரு தேசியக் கொடி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தாய்நிலத்தில் வாழும் சமூகங்களை பிரதிபலிக்க கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் புலிகளின் தமிழீழ தேசியக்  கொடியோ நிறத்திலும் அதில் வரையப்பட்டுள்ள இலட்சனையிலும் தனியே புலிகளின் நலனைத்தான் கூறி நிற்கின்றது.

உலகில் எந்த சமூக வரலாற்றிலும் இவ்வகையான போர்குணத்தையும் அடக்கு முறையையும் பிரதிபலிக்கின்ற தேசிய கொடியை காண முடியாது என்பதுடன் அது பிரதிபலிக்கும் தன்மையையும் நிஜத்தில் சொந்த மக்கள் மீது பிரயோகித்துக் காட்டிய பெருமையும் புலிகளையும் அவர்களின் தேசிய கொடியையும் சாரும்.

அதற்கமையவே பிரபாகரன் தன்னை சர்வதிகாரியாக அமைத்துக் கொண்டதற்கான அடயாளமாக அவர்களின் கோஷத்திலும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என வைத்து பேனிக்காக்க முற்பட்டுவந்தார். அதற்காகவே புலிகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் செயற்படுகின்றனர்.

தொன்மைமிகு இலங்கைத் தமிழர் வரலாற்றை நோக்குவேமேயானால் இலங்கை சுதந்திரத்திற்கு முன்னால் பல சுதேச தமிழ் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும் அக்காலங்களில் அத்தகைய சுதேச தமிழ் சிங்கள மன்னர்கள் சகல நாடுகளுக்கும் பொதுவான தங்கள் ஆட்சி அதிகாரத்திற்கான சண்டைகள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளார்களே தவிர அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகைய ஒற்றுமையை வலியுத்துகின்ற பல வரலாற்றுப் பதிவுகள் இன்று புலிகளின் கையாடல்களால் மறைக்கப்பட்டு அவர்களின் சர்வதிகாரத்திற்கு வாய்ப்பாக திரித்திக் கூறப்படுகின்றது.

இவ்வாறானா இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் காரணமாகவே இலங்கையை காலாதிக்கம் செய்த பிரித்தானியா சுதந்திரம் வழங்கும்போதும் பிரித்தானிய முடியரசோ அல்லது இலங்கையின் சுதந்திரப் போராளிகளோ தமிழர்கள் தனியாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவுமில்லை அவ்வாறான தேவையும் அவர்களால் உணரப்படவும் இல்லை.

தற்போது புலிகளால் நடத்தப்படுகின்ற மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற பிரச்சாரங்களை கேட்டு புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு சின்னப் பிள்ளைத்தனமான கருத்துக்களை புலிகளின் ஆதரவாளர்கள் கூறும்போது தமிழர் அறிவின்(அறிவிலி) உச்சநிலை உலகின் கண்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இங்கு வாழ்ந்துவருகின்ற தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என அனைவரும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளையாகவே காணப்படுகின்றனர். சில சிங்கள அரசியல் வாதிகளின் இனத்துவேசப்போக்குடன் சில தமிழ் ஏகாதிபத்திய வாதிகளின் சீரற்ற சிந்தனைகளால் தமிழினம் மிகப் பெரும் சீரழிவுக்கு முகம்கொடுத்ததோடு  தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.

இன்று உலகிலுள்ள அனைத்து ஊடகத் தரப்பாரும் புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் துரோகிகளாகிவிட்டனர். அந்த  வரையறைக்குள் லன்டன் பி.பி.சியின் தமிழோசையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேற்று புலிகளின் பிரச்சார ஊடக இணையத்தளமொன்றில் “தமிழினத்துரோகி பிபிசி தமிழோசைக்கு ஒரு பகிரங்க கடிதம்” என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது இதன் மூலம் இன்று உலகிலுள்ள சகல நடுநிலையான ஊடகங்களும் புலிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு துரோகிப்பட்டம் இந்த உலகலாவிய மிகப்பெரிய ஊடகத்துறைக்கு சாட்டுவதன் மூலம் அவர்களுக்கு எந்தத் தீமையுமில்லை அவர்கள் தங்களின் பணியை செவ்வனவே செய்வர் ஆனால் தீமை யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பொறுத்தவரை அவர்களின் ஊதுகுழலாக செயற்படுபவை மட்டுமே நடுநிலையான ஊடகம் என அவர்கள் நினைக்கிறார்கள். காரணம் தாங்கள் செய்த ஊழ்வினையால் விளைந்தவற்றை வைத்து மற்றவரைக் குற்றங்காண்பதன் மூலமாகவோ அல்லது கடவுளைக் குற்றம் சொல்வதன் மூலமாகவோ எதுவும் நடக்கப்போவதில்லை. இவைகளை தவிர்த்து அவர்கள் அவர்களாக மாறிக் கொண்டால் அல்லது தங்களின் ஏகாதிபத்தியவாதத்தில் இருந்து இறங்கி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதை மட்டும் உணர மறுக்கின்றனர்.

புலிகளின் தாகமும் தமிழர்களின் தாகமும் எப்போதும் வேறான இரு திசைகளிலேயே காணப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்பாணத்தில், கிழக்கிலென்று பல அரசியல் கட்சிகள் புலிகளை எதிர்த்து வெற்றிவாகை சூடிவந்திருக்கின்றன.

கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.

அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும்  புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

புலிகளின் தாகமே மக்களின் தாகமாகவும் இருந்திருப்பின் இலங்கை இராணுவம் புலிகளை நோக்கி முன்னேரும் போது மக்கள் இராணுவத்தை எதிர்த்து அணிதிரண்டு அரணாக நின்றிருப்பரே தவிர இராணுவத்திடமும் சர்வதேசத்திடமும் தங்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றும்படி  கோரியிருக்க மாட்டார்கள்.

இலன்டனில், பிரான்ஸில்,நோர்வேயில், கனடாவில் என புலம்பெயர் தேசங்களில் வீதிமரியல்கள் செய்வதைவிட புலிகளுடன் மக்களிருந்திருந்தாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக இலங்கையிலும் வன்னிலும் வீதிமறியல்  மக்கள் செய்திருப்பர் அவ்வாறு செய்திருப்பின் நிச்சயம் இலங்கை அரசு அடிபணியவேண்டிவந்திருக்கும்.

புலிகளின் வால்களுக்கு தெரியாத ஒன்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியும் அதுதான் தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்பது. அதனால்தான் பெயரளவாயினும் ஒரு சமாதான சூழலை கிழக்கில் அரசால் உருவாக்க முடிந்துள்ளது. இல்லையேல் இவ்வளவு உயிரிழப்புக்களுடன் சொந்த பந்தங்களைப் பிரிந்து வடக்கிலும் கிழக்கிலும் அகதியாக மக்கள் வாழாமல் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிராகவும் அவர்களின் இராணுவ நடவடிக்கு எதிராகவும் அரண் அமைத்திருப்பின் இலங்கை இராணுவம் ஒரு அங்குலம் கூட நகர்திருக்க முடியாது என்பதே உண்மை.

புலிகள் தங்கள் மக்கள்மீதும் தமிழ் பேசும் சமூகத்தார்மீதும் மற்றும் சகோதர போராட்ட குழுக்கள் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகள் கூட வாழ்ந்த முஸ்லீம் சமூகத்தினர் உட்பட சகல தரப்பார்மீதும் தங்கள் ஆயுத வன்முறையை கட்டவிழுத்து விட்டு அராஜகமாக உயிர்களைக் கொன்று, தூக்கத்திலிருந்த சிங்கள, முஸ்லீம் மக்களை  கொலை செய்து சிறார்களை வெட்டிக் கொலை செய்து பெற்ற தாயின் வயிறு பத பதக்க பிள்ளைகளை பிடித்துச் சென்று பலியாக்கிய பாவத்திற்கான பிரதிபலனே இன்று அவர்கள் அனுபவிப்பதாகும். இதில் விதியையும் கடவுளையும் நொந்துகொள்வதில் எவ்வித பயனுமில்லை

தமிழ்பேசும தரப்பாரது தேவையென்பது எப்போதும் புலிகளின் பாசிச தேவையிலிருந்து வேறுபட்டிருந்திருக்கிறது. 2004ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன புலிகள் மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிந்தே அன்றிரவு வீதிகளின் துப்பாக்கிகளால் சத்தவேட்டுகளை தீர்த்து மக்களை பயமுறுத்தினர். மட்டுமல்லாது அதையும் மீறி வாக்களித்த ஒரு வாக்காளரின் கையையும் வெட்டி தங்களின் இறுதி தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டனர்.

தற்போது புலிகள் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் இறுதி முயற்சியாக வன்னியில் அவர்களால் கட்டாயமாக ஆட்சேர்ப்புக்கு உள்ளாகப்பட்டு பலிகொடுக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினரையும் மற்றும் புலிகளின் தலைமைபீடத்துக்கு விசுவாசமான குடும்பங்களையும் இணைத்து நாங்கள் அனைவரும் மாவீர்ர் குடும்பத்தினர் எங்களுக்கு அரச கட்டுப்பாட்டில் பாதுகாப்பில்லை ஆகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் வழித்துணையுடன் தாங்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புக வழிவிடப்படவேண்டும் என்று மக்களின் பெயரால்  கோரிக்கை விடுத்து புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தப்பிக்க முயற்சிப்பார்கள் போலத் தெரிகிறது.

காரணம் அத்தகைய சூழலில் புலிகளுக்கு பாமரமக்களின் உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாததினால் யாரை பலிகொடுத்தேனும் தாங்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு நிச்சயம் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை தவிர எவரும் இணங்கப்போவதில்லை.

சர்வதிகாரி கிட்லர் தன்னைத்தான் சுட்டு மாய்த்துக் கொண்டபோதுகூட அவருடன் கூடயிருந்த சில சகாக்கள் குடும்பங்களுடன் தங்களை மாய்த்துக் கொண்டனர் அதற்க்கு அவர்கள் கிட்லர் இல்லாத உலகில் தாங்கள் வாழ விரும்பவில்லை என்று இறுதியாக கூறியிருந்தனர். இந்த சம்பவமும் மீண்டும் ஒரு முறை உலக வரலாற்றில் வன்னியில் நிகழும்போல் தெரிகிறது. இதையும்  புலம்பெயர் புலிகள் இலங்கை அரசின் கொடுமையென கணக்குக் காட்டலாம்.

இவ்வாறு புலிகளின் சுகபோகத்தை அனுபவித்த விசுவாசிகளைத் தவிர எந்த மக்களும் இன்று புலிகளுடனில்லை அவர்கள் அனைவரும் எஞ்சியிருக்கும் தங்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறைப்படுவதை காணமுடிகிறது.

இந்த சம்பங்களை உன்னிப்பாக அவதானித்து சிந்திப்பீர்களானால் புலிகள் என்றும் மக்களின் மனங்களின் இடம் பிடித்திருக்கவில்லை என்பதும் அவர்கள் செய்த ஊழ்வினை அவர்களை சூழ்ந்துள்ளதையும் காண்பீர்கள்.

மக்களின் ஜனநாயகரீதியான சுதந்திரப் போக்கை நேசிக்க புலிகளோ சர்வதிகார சுயாட்சிப்போக்கை கடைபிடித்தே வந்துள்ளனர்.  எனவே எப்போதும் புலிகளின் விருப்பு மக்களின் விருப்பாக ஈழத்தின் வரலாற்றில் இருந்ததில்லை.

“சமூக அநீதிகளை விதைத்த காலம் கடந்த காலத்துக்கு உரியது! சமூக நீதியைக் கட்டியெழுப்புகின்றவர்களுக்கே எதிர்காலம் உரியது!” -மேதகு ஜனாதிபதி. மகிந்த ராஜபக்ச சுதந்திர தின உரை 2009- 

16 ஏப்ரல், 2009

ஓட்டையோடு ஒன்பது.. உடைந்ததோடு பத்து! -கிழக்கான் ஆதம்-

செற்றாரைச் செறுத்தலின் தற் செய்கை சிறந்தன்று  -முதுமொழிக் காஞ்சி-

தமிழர் வாழ்வியல் ஆதாரங்கள் வரலாறுகள் என அனைத்தும் இன்று புலிகளின் நலன் சார்ந்ததாக  அமைக்கப்பட்டுள்ளன. உண்மையில் தமிழர் வரலாற்றை நோக்கி ஆராய நினைக்கும் எவருக்கும் தமிழர் வாழ்வின் ஆதாரத்தை எடுத்துக்காட்டுகின்ற வரலாற்றுப் பதிவுகளில் எல்லாம் புலிகளின் பணபலத்தையும் அவர்களின் பணத்துக்கு வால்பிடிக்கின்ற ஆய்வாளர்களின் கையாடள்களையும் காணக்கூடியதாகவுள்ளது.

கண்னை மூடிக்கொண்டு ஆதரவளிக்கின்ற படித்தவர்கள் என்று தங்களை சொல்லிக் கொள்பவர்களும் பிரதானமான பல தவறுகளை இலங்கையிலும் மற்றும் தாங்கள் வாழ்கின்ற நாடுகளிலும் செய்தே வருகின்றனர். இவ்வாறு மாற்றத்துக்குள்ளாக்கப் பட்டுள்ளதுதான் இலங்கை தமிழர் வரலாறு. இதை தற்போது படிக்கின்ற போது ஆயுதபோராட்டத்திற்கு சார்பான நிலைக்கு இதில் உள்ளீடுகள் புகுத்தப்பட்டுள்ளதை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது.

புலிகளின் கைவரிசை இங்கேயும் காட்டப் பட்டிருப்பதுடன் தமிழ்பேசுபவர்களின் (தமிழர்களின்) உண்மையான வரலாற்று நிலையை தற்போதைய போராட்டத்தினூடாக இதற்கு முந்திய காலத்து அரசியல் சார்ந்த மிதவாத போராட்டத்தின் யதார்த்த நிலையை மறைக்க முற்பட்டிருப்பதை காணலாம். தற்போது தமிழ் பேசும் (தமிழர்) சமூகம் ஆயுதபோராட்டதின் வீழ்ச்சியூடாக இதை உணர்ந்து கொண்டாலும் இந்த ஆவணப் படுத்தல்களிலிருந்து நிஜமான சரியான தமிழ் பேசும் மக்களின் (தமிழர்களின்) வரலாற்றை தூசுதட்டி அடுத்த சந்த்தியினருக்கு சரியாக வழங்குவது இன்றைய சமூக ஆவலர்கள் மற்றும் எழுத்தாளர்களின் கடமையாகும்.

இத்தகையதொரு கைங்கரியத்தை நாம் செய்யத் தவறுவோமானால் இலங்கையில் வாழப்போகும் தமிழர்களின் வாழ்கையில் பல சுனாமிகளுக்கு அது வழி வகுக்கும். காரணம் புலிகளால் எல்லாப் இடங்களிலும் தமிழர் வரலாற்றில் புகுத்தப் பட்டிருக்கும் ஆயுதவாத வாரலாற்றுப் படிமம் பின்னால் வரும் சந்ததிகள் அரசியல் ரீதியான சிக்கல்களுக்கு தாங்கள் முகம் கொடுக்க நேரிடும் போதெல்லாம் முன் சந்த்தியினர் செய்த அதே தவறைச் செய்து தங்களின் இரத்த்த்தை ஓட்டிக் கொள்வது மட்டுமன்றி தொடர்ந்து இலங்கையில் வாழப்போகும் தமிழர்கள் தங்கள் வாழ்கையை கையில் தூக்கும் பைகளில் வைத்து வாழவைத்துவிடும் அபாயமும் இதில் உண்டு.

இதை எழுதும் போது மிகவும் பாரிய தவறு ஒன்றை உணர்கிறேன் சில நாட்களுக்கு முன்பு நான் விடுமுறை சென்றபோது எனது நெருங்கிய நண்பர்  ஒருவர் சொன்னார் “நீங்கள் தமிழ் பேசும் ஒட்டு மொத்த சமூகத்தையும் குறிக்கும் போது “தமிழர்கள்” என்று குறிப்பிடாமல் தமிழ் பேசுவர்கள் என்று குறிப்பிடுங்கள் என்று”  நான் ஏன்? எனக் கேட்டேன் “தமிழர்கள் என்று எங்களை (முஸ்லீம்களை) புலிகளோ அல்லது வடக்கில் வாழும் மக்களோ ஏற்றுக் கொள்ளவில்லையே” என்றார் அப்போதுதான் நான் விழித்துக் கொண்டேன் இங்கேதான் எவரோ ஒருவர் தமிழர்கள் தொடர்ந்து பிரிந்தே இருக்க வேண்டும் என்ற கனவுடன் எங்கோ ஒரிடத்தில் எழுதிய ஒரு பிரிவினைவாதம் இங்கே சமூகத்தை எவ்வளவு பாதித்து இருக்கிறது என்று.

இங்கேதான் முஸ்லீம்களும் மற்றும் தாய்மொழியை தமிழாக்க் கொண்ட அனைவரும் சிந்திக்க வேண்டும் “தமிழர்” என்பது தமிழ் மொழி நமக்கு தந்த கௌரவமான அந்தஸ்த்து அதை தட்டிப் பறிக்க யாருக்கும் உரிமை கிடையாது தமிழர் என்று சொல்ல புலிகளுக்கு எவ்வளவு அந்தஸ்து உண்டோ அதைவிடக் கூடுதலான உரிமை நமக்கும் உண்டு இந்த உரிமையை நாம் இப்போது விட்டுக் கொடுப்போமானால் எதிர் காலத்தில் தமிழர் என்ற வரையறைகுள் நீங்கள் இல்லை என  ஒதுக்கப்பட்டுவிடுவோம் தைரியமாக அனைவரும் பாவியுங்கள் தமிழர் என்ற பலர்பால் சொல் தமிழ் பேசுகின்ற அனைத்து சமூகத்துக்கும் போதுவானது அதில் பிரிவினை வேண்டாம் ஆனால் நமக்குள் வேறுபாடான மதக் கலாச்சார பண்பாடுகளை கொண்ட சமூகங்கள் இருக்கின்றன அவைகளை அந்தந்த சமூகங்கள் பேனிக்கொள்ளட்டும் அதுவே தமிழ் சமுகங்களுக்குள் ஒற்றுமையான வாழ்வை அமைத்துத் தரும்.

இது உலகில் போதுவான ஒரு அம்சம். நாம் வாழும் உலகை  நோக்குவோமானால் உலகில் வாழும் அனைவரும் அவ்வாறான தங்களின் தாய்மொழியின் அடயாளத்தை பேனியே வருகின்றனர். ஆங்கிலேயர், போக்துக்கீசர், பிரஞ்சுக்கார்ர், அல்பேனியர், அராபியர், சீனர், மலாயர், மலையாளத்தார், தெலுங்கர் எனும் அனைத்து சமூகங்களும் தங்களின் தாய் மொழியினால் அடயாளப்படுத்தப்படுவதே தவிர அது ஒரு மத அல்லது சமூகப் பிரிவுக்குள் கட்டுப்பட்டதல்ல. 

இவ்வாறு சகல துறைகளிலும் நாம் விடும் சின்னச் சின்ன தவறுகளில் தொடங்கி பாரிய சிக்கல்கள் வரை அனைத்தும் நம் சமூகங்களால் இனம்காணப்பட்டு அவற்றின் வேர்களை அறுத்தெறிய இப்போதிலிருந்தே தமிழ்  சமூகத்தை சார்ந்த புத்திஜீவிகள் முன்வர வேண்டும். இவைகளை வெளிக்கொணர்ந்து அவற்றின் உண்மைத் தன்மையை நம் மக்களிடம் கொண்டு சென்று நமது சமூகத்தின்  ஆரோக்கிய வாழ்விற்கு வழிசமைக்கப் பாடுபடவேண்டும்.

இன்றைய இலங்கை தமிழர் சமூதாய அமைப்பில் பல நல்ல சிந்தனைவாதிகள் மற்றும் வரலாற்று ஆசிரியர்கள் தங்களின் சமூகப் பொறுப்பிலிருந்து ஒதுங்கியிருக்கின்றனர் அவர்கள் தங்களின் யதார்த்தவாதத்தினை மீண்டும் மக்களிடம் கொண்டு செல்ல முன்வரவேண்டும் திரித்து சொல்லப்படும் எதைக் கண்டாலும் அவைகளுக்கான யதார்த்தநிலையை உடனே தங்களுக்குத் தெரிந்த ஏதாவது வழியில் மக்களுக்கு சென்றடைய வேண்டும்.

மேலே எழுதியுள்ள முதுமொழிக் காஞ்சி எதைக் கூறுகிறது என்றால் “பகைவரை வெல்வதைவிட தம்மை மேன்படுத்திக் கொள்வது சிறப்பானதாகும்” ஆகவே நமது சமூகத்தை மேன்படுத்துவதற்காக தங்களின் சமூகப் பொறுப்பை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்.

சமூகப் பொறுப்பு என்பதால் புலிகளின்  கொடியுடன் சகல நாடுகளில் வலம் வருவது சமூகப் பொறுப்பல்ல அது வானத்தைப் பார்த்து நாய் ஊளையிடுவது போன்றது. காரணம் புலிகள் ஆயுதத்தை கீழே வைத்து சரணடைய வேண்டும் மற்றும் சொந்த மக்கள் மீதான புலிகளின் நெருக்குதல்கள் தொடர்ந்தால் அவர்கள் மேற்கத்தைய நாடுகளில்  தடை செய்யப் படுவார்கள் என்பதையெல்லாம் மகிந்த ராஜபக்ச ஆட்சிக்கு வருமுன்னரே பகிரங்கமாகவும் தனிப்பட்ட முறையிலும் மேற்கத்திய நாடுகள் புலிகளுக்கு அழகாக விளக்கிச் சொல்லியிருந்தனர். அதை நக்கலாக புலிகளின் தத்துவாசிரியர் மறைந்த அன்டன் பாலசிங்கம் புலிகளின் ஆதரவாளர்களுக்கு அவர் இறுதியாக லன்டன் அலெக்சாந்திரா பிளேசில் ஆற்றிய உரையில் கூறுகியிருந்தார். ஆனால் அதைக் கேட்டு சிந்தித்துச் செயற்படத்தான் அன்றும் இன்றும் புலிகளும் அவர்களின் வால்களும் மறந்துவிட்டன.

அன்று விசில் அடித்து மறைத்தனர் இன்று கண்ணீர் விட்டு அத்தகைய மிக முக்கிய விடயங்களை மறைக்கின்றனர். இதைப் படிக்கின்ற புலிகளின் ஆதரவாளர்கள் அந்த மாவீரர் தின விளக்கவுரையை யூ டியூபிலிருந்து ஒரு முறை விசில் சத்தங்கள் அற்ற அமைதியான சூழலில் மீண்டும் ஒரு முறை கேட்டுப் பாருங்கள் இன்று நடக்கிற எல்லா சர்வதேசங்களின் புறக்கணிப்புக்களும் ஏன் எனத் தெரியவரும்.

ஆகவே சர்வதேசம் புலிகளையும் புலிகளின் ஆதரவாளர்களையும் அதன் பெயரில் யுத்தத்தில் சிக்கியுள்ள மக்களையும் இன்று புறக்கனிக்கவில்லை. பல வருடங்களுக்கு முன்னர் நீங்கள் “பத்தோடு பதினொன்று” என்று அவர்களின் வேண்டுகோள்களை எல்லாம் புறக்கணித்ததால் இன்று உங்களை அவர்கள் “அத்தோடு இதுவுமொன்று” என்று புறக்கனிக்கின்றனர்.

ஆகவே பல வரலாற்றுத் தவறுகளை செய்த தமிழ் சமூகம் மீண்டும் மீண்டும் அவைகளில் இருந்து மீண்டெழுந்து வெளியில் வராமல் மீண்டும் அதே தவறுகளை செய்து கொண்டிருப்பது வருந்தத்தக்கதாகும்.

உலக அரசியல் சாணக்கியர்கள் அனைவரையும் தாம் வென்று ஆட்சி அமைத்ததாக கூறி தாங்கள் தனிநாட்டை  அமைத்துவிட்டு உலக அங்கீகாரத்திற்காக காத்திருப்பதாக கூறிய கற்பனாவாதிகளான புலிகளும் அவர்களின் அமைப்புகளும் புலிவால்களும் செயற்பட்டு வந்ததானது அவர்களின் அரசியல் சமூக முதிர்ச்சியின் வெளிப்படாகும். அதையும் ஏற்றுக் கொண்ட பல மூளை(லை)சாலிகள் கல்விமான்களை நாம் நோக்குவோமானால் அவர்கள் புலிகளின் தனிநாட்டுக் கனவு என்ற ஒரு மனநோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதை எழுதும்போது எனக்கு ஞாபகம் வருகிறது சில தினங்களுக்கு முதல் பி.பி.சி தமிழோசைக்கு பேட்டி அளித்த புலிகளின் பத்திரிகையாளர்  டேவிட் நிராஜ் “ஆயுத போராட்டத்தால் வெற்றி பெற முடியாது என்பதை புலம் பெயர்தமிழ் மக்கள் தற்போது உணர்ந்துள்ளனர் எனவே உலகம் முழுவதும் போராட்டங்கள் நடத்துகின்றனர்” எனத் தெரிவித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் ஆயுத போராட்டத்தால் மட்டும்தான் தமிழர்கள் தங்கள் உரிமைகளை பெற முடியும் என அதிகமான தனது எழுத்துக்கள் மூலமும் படைப்புக்கள் மூலமும் மக்களை உசுப்பேத்திவிட்ட டேவிட் நிராஜ் இன்று தான் தப்புச் செய்யவில்லை மக்களே தப்புச் செய்தனர் என மீசையில் மன்னொட்டாத கதை கூறுவதை வைத்து இவரொரு உண்மையான சமூக உணர்வுள்ள ஊடகவியலாளரா? அல்லது பண உணர்வுள்ள ஊடகவியலாளரா? என்பதை நீங்களே தீர்மானியுங்கள்.

அன்று உசுபேத்தி நீங்கள் மக்களை சிந்திக்க விடாததன் விளைவு இன்று அவர்களின் அதிகமான சொந்தங்களை தாய் மண்ணில் காணாதுபோன திசையரியாது அம்மக்கள் தள்ளாடுகின்றனர். அந்த மக்களுக்காக மீண்டும் மீண்டும் புலிகளின் பணத்துக்கான தங்களின்  சார்புப் போக்கை விடுத்து உண்மையான தமிழர்களின் சமூக விடுதலைக்காக செயற்படுங்கள்.

நீங்கள் செய்த ஆய்வுகள் மற்றும் கூறிய விடயங்கள் எதுவும் சர்வதேசத்தாலும் இலங்கையாலும் ஏற்றுக் கொள்ளப்படாதது மட்டுமன்றி புலிகளாலும் அத்தகைய ஆய்வுகளுக்கு ஏற்ப வெற்றியடைய முடியவில்லை. இதிலிருந்தே தங்கள் கணிப்பின் தவறுகளை உணர்ந்து கொள்ளுங்கள் இப்போதும் புரியவில்லை என்றால் நீங்கள் எழுதிப் படைத்த உண்மையின் தரிசனம் உற்பட சில ஆக்கங்களையாவது மீண்டும் ஒரு முறை  நீங்களே கேட்டுப்பாருங்கள் நீங்கள் எங்கெங்கு பிழை விட்டீர்கள் என்பது தெரியும்.

நான் தங்கள் மீதுள்ள கோபத்தில் எழுதவில்லை இதுவே நிஜம். நமது மக்கள் மென்மேலும் பலிகடாக்களாக்க மட்டும் முற்பாடாதீர்கள் அவர்களை காப்பாற்றுவது நமது அனைவரினதும் பொறுப்பும் கடமையுமாகும். “முட்டாள்களுக்குத்தான் ஒரு வழி மூளைசாலிகளுக்கு பல வழி”  போராட்டம் தோற்றால் என்ன? தமிழர்களின் மீட்சிக்கு அவர்களிடம் இருக்கும் தவறுகளை மட்டும் கழைய வழியமைத்தால் போதும் தமிழீழம் தானாக மிளிரும்.

சமூக அக்கரை என்பது எல்லோருக்கும் இருப்பதில்லை ஒரு சிலருக்கு மட்டும் கடவுளால் வழங்கப்பட்ட வரம் அதற்கு காரணம் ஒவ்வொறுவரும் ஒவ்வொறு வகையான சிறப்பாற்றலுடன் இவ்வுலகில் உள்ளனர். அத்தகைய மானிட வர்க்கத்தில் இந்த ஊடகத்துறையினர் அந்த சமூகங்களின் மாற்றத்துக்கு மிகவும் முக்கிய காரணியாக இருக்கின்றனர். தனிப்பட்ட ஒரு ஊடத்துறை சார்ந்த ஒருவரின் சிந்தனைப்போக்கு ஒரு சமூகத்தின் கருத்தாக மாற்றம் பெறும் வல்லமை பெற்றதாகும்.  ஆகவே அத்தகைய பெருமைக்குரியவர்கள் மிகவும் சிந்தித்து செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

நமது தமிழ் பேசும் சமூகத்தின் தவறுகள்பல இன்று கட்டாயம் கழையப்பட வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். இங்கு பயப்படுவதற்கோ அல்லது அடங்கிப்போவதற்கோ எதுவுமில்லை உள்ளதைச் சொல்வோம் நல்லதைச் செய்வோம் வெற்றியும் பெறுவோம்.

புலிகளைச் சார்ந்து பிரச்சாரம் செய்வோர் பல பிழையான தகவல்களை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் தமிழ் மக்களை ஏமாற்றியே வந்துள்ளனர். அதற்கு உதாரணமாக கூறுவதாயின் புலிகளின் பிரச்சாரத்திற்கும் கணிப்புக்களுக்கும் எதிர்மாறாக கருணா அம்மானின் பிரிவின்போது புலிகளின் வெருகல் தரையிரக்கமும் அவர்களின் கிழக்கின் மீதான தாக்குதல்களின் போது அந்த மக்களின் உணர்வுகளும் முற்று முழுதாக புலிகள் இயக்கத்தை கிழக்கில் புறக்கணிப்பதாகவே இருந்ததை கூறலாம்.

இன்னும் எனக்கு ஞாபகமிருக்கிறது. 2004ம் ஆண்டு நாலாம் மாதம் என்று நினைக்கறேன் (திகதி சரியாக ஞாபகமில்லை) மட்டகளப்பு செங்கலடியில் உள்ள திரைப்பட மாளிகையில் (தியேட்டரில்) கில்லி திரைப்படம் பார்க்க போயிருந்தோம். அப்போது அந்த தியேட்டருக்கு வெளியில் வீதியில் அதிக கூட்டமாக மக்களும் இளைஞர்களும் காணப்பட்டனர் அப்போது அங்கே ஒரு வெள்ளை நிற வேனில் நான்கு இளைஞர்கள் வந்தனர் அவர்கள் அங்கே கூடியிருந்த மக்களிடம் தாங்கள் அவசரமாக போகவேண்டும் வழிவிடுங்கள் என்றனர் மக்கள் அதை கவனிக்காமல் நிற்க அதிலிருந்த நாள்வரும் ஒருவர் அல்லது இருவருடைய கையில் கைக்குண்டுடன் இறங்கிவந்து நாங்கள் புலிகள் வழிவிடுங்கள் என்றனர் அப்போதும் யாரும் அதை காதில் வாங்கவில்லை உடனே அவர்கள் நாங்கள் பிரபாகரனின் ஆட்கள் வழி விடுங்கள் என்றனர் அடுத்த நிமிடத்தில் அங்கு கூடியிருந்த அனைவரும் அந்த நால்வர் மீதும் பாய்ந்து தாக்குதலை மேற்கொண்டார்கள் அவ்விடத்திலேயே இரண்டுபேர் அல்லது மூவர் குற்றுயிராக்கப்பட்டனர் தப்பித்த ஒருவர் அல்லது இருவர் வேனை திருப்பிக்கொண்டு வந்த வழியே தப்பிச் சென்றனர் மாட்டிக் கொண்டவர்களை அருகிலிருந்த இரானுவத்தை வரவழைத்து இராணுவத்திடம் தமிழ் மக்களால் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் எதைக் காட்டுகிறது கிழக்கு மக்களின் புலிகள் மீதான வெறுப்பையே காட்டுகிறது இதற்கு காரணம் கருணாவின் பிரிவு அல்ல. தங்கள் சொந்த பந்தங்கள் தாங்கள் நம்பியிருந்த புலிகளாலேயே வெருகல் தரையிரக்கத்தின்போது துரோகிகள் என சுட்டுக் கொள்ளப்பட்டதாகும்.

தாங்கள் காலகாலமாக காட்டிக் காத்துவந்த புலிகளை அவர்களே பிடித்து இராணுவத்தினரிடம் ஒப்படைப்பதென்பது மனவியல் ரீதியாக அந்த மக்கள் புலிகளின் தப்பான அனுகுமுறையால் அடைந்த துன்பத்தின் வெளிப்பாடு மட்டுமே. தாங்கள் வளர்த்த கடா மார்பில் பாய்வதை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதுபோன்றதோரு அனுகுமுறையைத்தான் தற்போது வன்னி மக்களின் விடயத்திலும் புலிகள் கடைப்பிடிக்கின்றனர் ஆகவே எதிர்வரும் காலங்களில் வடக்கில் வாழும் தமிழர்களாலும் புலிகள் இயக்கம் புறக்கணிக்கப்படப் போவது உறுதியாகும்.

புலிகளின் இயக்கத்திற்கான ஆதரவுத் தளம் தற்போது புலம்பெயர் மக்களிடம் மட்டுமே காணப் படுகின்றது அது இலங்கையில் அவர்கள் வாழ அருகதையற்றவர்கள் என்பதால் அவர்களின் ஆதரவு. எதையும் புலிகளுக்காக சாதிக்கப் போவதில்லை இதை தந்தை பெரியாரின் பானியில் சொல்வதானால் “ நமது நாட்டு பணத்தைப் போலவே நம் அரசியலும் வெளிநாட்டில் செல்லாது” எனலாம்.

கடந்த காலத்தில் தீர்க்க தரிசனமாக புலிகளின் தலைவர் ஒன்றைக் கூறியிருந்தார் அதாவது புலம்பெயர்ந்து சென்றவர்கள் அனைவரும் தமிழினத் துரோகிகள் என்பதாகும். அது மட்டும் நிச்சயம். அவர்களின் இந்த தூரோகம்தான் தமிழனத்தை மூன்றாம் தர பிரஜைகளாக இலங்கையில் மாற்றியது வெள்ளிடைமலை.

இன்றும் பல சந்தர்ப்பங்களில் புலிகளும் அவர்களின் ஆதரவாளர்களும் இன்னும் அரசியல் மற்றும் சிந்தனாவாதிகளும் தங்கள் சமூகம் சார்ந்த செயற்பாடுகளில் பல தவறுகளை தொடர்ந்து புதுப்பித்தே வருகின்றனர். இவைகள் தங்கள் சமூகத்தை பாரதூரமான வங்குரோத்து நிலைக்கு இட்டுச் செல்லும் என்பதை  இவர்கள் உணர முற்படுவதாக இல்லை.

 எப்படி இலங்கை வாழ் தமிழ் மக்களால் ஓட்டையோடு ஒன்பது உடைந்த்தோடு பத்து என தற்போது புலிகள் நிராகரிக்கப்படுகின்றனரோ இதே நிலை காத்திரமாக செயற்படாத சகல தரப்பினர் மீதும் தொடரவே போகின்றது அதை செய்விப்பதே இப்போதைக்கு சமூகத்தை நேசிக்கும் சகலரின் பணியாகவும் இருக்கப்போகிறது. இது யாருக்கெல்லாம் பொருந்தும் என்பதை அவர்களது மனச்சாட்சியை கேட்டு அவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

 கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.  (திருக்குறள்)

15 ஏப்ரல், 2009

உண்மையை உரக்கச் சொல்வோம் - கிழக்கான் ஆதம்-

“அல்லாஹ் உங்களுக்கு உயிர் கொடுக்கிறான், பின்னர் அவனே உங்களை மரணம் அடையச் செய்கிறான், பின்னர் கியாம நாளன்று அவன் உங்களை ஒன்று சேர்ப்பான்- இதில் எவ்வித சந்தேகமில்லை. எனினும் மனிதரில் பெரும்பாலோர் (இதை) அறியமாட்டார்கள் என்று (நபியே!) நீர் கூறும்”

அல்-குர்ஆன்-ஸூரத்துல் ஜாஸியா (45:26)

 மானிட பிறப்புப் போலவே இறப்பைப் பற்றியும் அதற்கு உலகில் வாழும் மனிதர்கள் அனைவரும் எந்நேரத்திலும் தங்களை தயாராக வைத்துக் கொள்ளவேண்டும் என மிகவும் துல்லியமாக வலியுறுத்தும் மார்க்கங்களில் ஒன்று இஸ்லாம். அதன் வேதநூலாகிய புனித குர்ஆனில் இது சம்பந்தமாக அதிகமான வசனங்கள் காணப்படுகின்றன அவையனைத்தும் மனித வாழ்வின் யதார்த்த நிலையையும் மரணம் தங்களை வந்து சேரும்வரை அவர்கள் படைத்த நாயனாகிய அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் யாரும் தலைவணங்கவோ அல்லது பயப்படவோ கூடாது என்பதையே வலியுறுத்தி உள்ளன.

 இவ்வாறான மிகவும் தெளிவான ஒரு வேதத்தைப் பின்பற்றுகின்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர்களில் ஒரு சாராராகிய அம்பாறை மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் அண்மையில் புலிகளால் படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச்.எல்.ஜமால்தீனுடைய தாக்குதலுக்கு விடுத்துள்ள கண்டன அறிக்கை மனவேதனையை அளிக்கிறது.

 குறித்த கொலை நடந்த ஒரு சில மணிநேரத்திலேயே புலிகளினினால் நடாத்தப்படும் இணையத்தளங்கள் (சங்கதி, புதினம்) உற்பட புலிகளின் ஊடகங்கள் அனைத்தும் அக்கொலை புலிகளால் நடாத்தப்பட்டதாக உரிமை கோரியிருக்க. இந்த அறிக்கையை விடுத்த எம்.எல்.எம். ஜமால்தீன் (செயலாளர்,அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளம், மருதமுனை மஸ்ஜிதுந்நூர் ஜும்ஆப்பள்ளிவாசல்) அது இனம் தெரியாதோரால் நடத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

 இவ்வறிக்கையானது மிகவும் கண்டிக்கத்தக்கதும் பயங்கரவாதிகள் முஸ்லீம்கள் சமூகத்தின் மீது தொடர்ந்து நடாத்திவரும் கொலைகளை அங்கிகரிப்பதைப் போலவும் உள்ளது. மட்டுமல்லாது மறைந்த பொலிஸ் அத்தியட்சகர் எச்.எல்.ஜமால்தீன் சமூகத்திற்கு ஆற்றிய பணிகளையும் அவர் சமூகத்தில் கொண்டிருந்த அக்கரையையும் அவமதிப்பதாகவும் உள்ளது.

 இத்தகைய முஸ்லீம் அமைப்புக்கள் என்று கூறிக்கொள்பவை புலிகளின் இத்தகைய கண்டிகத்தக்க தாக்குதல்களின் போது புலிகளை மறைத்து அறிக்கைகள் விடுவது புலிகளுக்கு நமது சமூதாயத்தில் மறைந்து கொண்டே நமது புத்திசாலிகளை அழிக்க வழிசமைப்பதோடு சர்வதேசத்தில்  பார்வைக்கு முஸ்லீம்கள் மீது புலிகள் புரிந்துவரும் படுகொலைகளை மறைக்க ஒரு வாய்ப்பாக அமைந்து விடும். மட்டுமல்லாது தற்போது இலங்கையில் வாழும் தமிழ் பேசும் தரப்பார் தொடர்பாக சர்வதேசமும் நாட்டை ஆளும் தரப்பும் எடுத்துவரும் தமிழ் பேசும் தரப்பாரினது நில, உரிமைப் பங்கீட்டு நடவடிக்கைகளில் பாதிப்புக்களை ஏற்படுத்தும்.

 மிகவும் ஒரு முக்கியமான காலகட்டத்தை தற்போது முஸ்லீம் சமூகம் எதிர்நோக்கி உள்ளது. இத்தகைய சூழலில் பாஸிஸ புலிகள் முன்னெடுத்துவரும் கொலைகளையும் மற்றும் அவர்கள் இதுவரை புரிந்துவந்த இதர அடாவடித் தனங்களையும் வெளிக்கொணர்வதற்கான கடமை நம் முன் நிற்கின்றது. இந்த சமயத்தில் மிகவும் துணிச்சலாக நமது சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்கள் செயற்பட வேண்டும்.

 பல ஆண்டுகள் காலமாக தமது சமூகத்துக்காக சர்வதேச ரீதியில் தனது எழுத்துக்கள் மூலமும் காத்திரமான கண்டனங்கள் விடுப்பதன் மூலமும் துணிச்சலாக செயற்பட்டுவரும் சகோதர்ர் எச்.எம்.எம். பஷீருக்கும் மற்றும் சகல எழுத்தாளர்கள் சிந்தனைவாதிகளுக்கும் முஸ்லீம் சமூகத்தின் சார்பில் நன்றியை நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.

 இது மனிதநேயத்தை நேசிக்கிற ஒவ்வொருவரின் கடமை ஆகும். இத்தருனத்தில் நாங்கள் விடுகின்ற பிழைகள் பின்னால் எங்கள் சந்ததியினர் வாழ்வில் பாரிய வடுக்களாக மாறிவிடும் என்பதனை குறித்த தரப்பார் உணர்ந்து கொள்ள வேண்டும்.

 இஸ்லாமிய சமூகத்தின் பெயரைச் சொல்லி இறைவனை மட்டும் பயப்படுவர்களாக நீங்கள் இருந்தால் உப்புச் சப்பையாக அறிக்கைகள் விடாமல் நேரடியாக தவறுகளை சுட்டிக் காட்டி கண்டனம் தெரிவியுங்கள். இல்லையேல் மௌனியாக இருந்து கொள்ளுங்கள் அந்தப் பொறுப்பை இன்னோர் சாரார் ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறார்கள்.

 புலிகள் தங்களின் சர்வதிகார காலத்தில் முஸ்லீம் சமூகத்தில் இதுரை எத்தனை ஆயிரம் உயிர்களை கொலைசெய்து சொத்துக்களை அழித்து எத்தனையோ குடும்பங்களை நிர்கதியாக்கியுள்ளனர். நீங்கள் அவர்களை மன்னித்தாலும் அவர்கள் உங்களை தமிழ் பேசும் மக்களாக ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. மன்னிப்பு என்பது கண்ணியமான மனிதர்களின் குணம் அதை புலிகளிடம் எதிர்பார்க்க முடியாது. ஆகவே நீங்கள் சமூகத்தின் சார்பில் சமூகத்திற்காக ஏதாவது செய்வதாயின் அதை பொறுப்புணர்ச்சியுடன் காத்திரமானதாக செய்யுங்கள்  இல்லையென்றால் அவ்வாறான விடயங்களில் இருந்து தள்ளியிருங்கள். அவைகளை முன்னெடுக்க இறைவனுக்கு மாத்திரம் பயப்படுகின்ற சிலராவது நமது சமூகத்தில் உண்டு.

 புலிகள் இதுரை காலமும் செய்துவந்த பிழைகளும் அதை ஆதரித்து வந்த கூட்டத்தின் ஆதரவுமே இன்று அந்த இயக்கத்தை இராணுவத்தைவிட அதிக தாக்கங்களை அவ்வமைப்புக்கு ஏற்படுத்தி புலிகளை நிர்மூலமாக்கியுள்ளது. இந்த நிலை நம் சமூகத்திற்கு வரவேண்டாம்.

 காலாகாலமாக அரசியலிலும் மற்ற சகல துறைகளிலும் ஏமாற்றப்பட்டு வந்த நமது சமூகத்துக்கு ஒரு விடிவையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தியவர் முஸ்லீம்களின் தன்னிகரில்லாத் தலைவர் மர்ஹூம் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள்.  தலைவர் சமூகத்திற்காக தன்னை அற்பனித்த போது அவரது உயிர் பல தமிழ் ஆயுத சக்திகளால் விலை பேசப்பட்டது அப்போதெல்லாம் தன்னுடன் தன்னை கபன் செய்யத் (இறந்தவரின் உடலை இறுதியாக சுற்றும் புடவை) தேவையான கபன் பிடவையை எந்நேரமும் எடுத்துச் சென்று மரணத்தை வென்ற  தலைவர். அவர் காட்டித் தந்த வழியில் பயணிக்கும் நமது சமூகம் இவ்வாறான சில்லறைகளின் துப்பாக்கிகளுக்கு பயந்து அவர்களை மறைத்து அறிக்கைகள் விடுக்கப்படுவதை ஏற்றுக் கொள்ளாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

 இதே போன்ற பல அச்சுறுத்தல்கள் தொடர்ந்தும் முஸ்லீம் சமூகத்தினருக்கு புலிகளால் விடுக்கப் படுகிறது. புலிகள் மிகவும் பலமாக கிழக்கின் ஆதிக்க சக்தியாக இருந்த காலத்திலேயே அவர்களை சார்ந்து செயற்பட தொடர்ந்து மறுத்த காரணத்தினாலும் புலிகளின் சர்வாதிகாரப் போக்கை தொடர்ந்து  எதிர்த்ததாலும் பல உயிர்களையும் உடமைகளையும் அரசியல் தலைமைகளையும் படித்தவர்களையும் புத்திசாலிகளையும் இழந்தது நமது சமூதாயம். அவைகள் நமது சமுதாயத்திற்கு இழப்பாக அமையவில்லை மாறாக எழுச்சியாகவே அமைந்திருந்தது.

 தற்போது  இறுதி கால கட்டத்தில் இருக்கும் இந்த கொலைவெறிக் கூட்டம் இன்னும் பல இதுபோன்ற கொலைகளை நமது சமூகத்தில் மேற்கொள்ளும். காரணம் ஜனநாயக வாதிகளாக நிராயுத பாணிகளாக அமைதியை நம்பி வாழும் மக்களிடம்தான் அவர்களின் ஆயுத பலத்தை காண்பிக்க முடியும் இதையே அவர்கள் தங்களை நம்பிய வன்னி மக்களிடமும் தற்போது காண்பித்து வருகின்றனர்.

 உண்மையில் இவர்கள் தமிழ் மன்னன் எல்லாளனின் வீரமுடையவர்கள் என்றால் அவர்களின் வீரத்தை மர்ஹூம் எம்.எம்.ஜமால்தீன் தனது சீருடையில், பணியில் இருக்கும் போதல்லவா காண்பித்திருப்பர். இலங்கை இராணுவத்தை மட்டுமல்ல முஸ்லீம்களின் எழுச்சியும் பாஸிஷ புலிகளுக்கு அதிகமான கிலியையும் தமிழ் பேசும் மக்களுக்கு அதிகமான நம்பிக்கையும் ஏற்படுத்தியிருக்கிறது. மிகவும் வாஞ்சையுடன் செயற்படும் இந்த இரண்டு சமூகத்தையும் குழப்பி கிழக்கின் இரத்த வெறியை ஏற்படுத்தவே புலிகளின் வால்கள் மிகவும் துடிக்கின்றன.  இவர்களின் ஆசை மட்டுமல்ல துடிப்பும் மிக விரைவில் அடங்கிவிடும்.

 அவர்கள் எத்தனை உயிர்களை வேண்டுமானாலும் இன்னும் இன்னும் கொலை செய்யட்டும். அவர்கள் நடாத்தும் படுகொலைகள் அவர்களின் வீழ்சியை உலகில் தீர்மானித்தது இன்னும் தீர்மானிக்கும்.

 யா அல்லாஹ்! தங்கள் சமூகத்திற்காக தங்களை அழித்துக் கொண்ட சகல புனித ஆத்மாக்களின் பாவங்களையும் மன்னித்து அவர்களின் பிழைகளை நீ பொறுத்தருள்வாயாக.! ஆமீன்.

 ஆக்கம்

கிழக்கான் ஆதம்.

அரசியல் முன்மொழிவுகளும் ஏமாற்றப்படும் முஸ்லீம் சமூகமும் (பாகம்-4) -கிழக்கான் ஆதம்-

இக்கால கட்டத்தில் இளைஞர்கள் மத்தியில் இருந்த எழுச்சி ஆயுதரீதியாக  போராட வேண்டும் என்ற உணர்வில் உந்தப்பட்ட அனைவரும் இன, மத பேதமின்றி வடக்கில் உள்ள தலைவர்களால் அமைக்கப்பட்ட விடுதலைப் போராட்டக் குழுக்களுடன் தங்களையும்  இணைத்துக் கொண்டனர். அக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகத்தைச்  சார்ந்த தீர்க்க தரிசனமான அரசியல் சாணக்கியர்கள் மற்றும் தமிழ் சமூகத்தைச் சார்ந்த புத்திஜீவிகள் இதனைக் கண்டித்தனர். பொது மேடைகளில் இவ்வாறான போராட்டங்கள் பயனளிக்க கூடிய வகையில் அது பயனிக்கவில்லை என்றும் பிரச்சாரங்கள் இடம்பெற்றன.

இவ்வாறான காலகட்டத்தில் அப்போதைய அரசியல் தலைவர்கள் முதல் மதத் தலைவர்கள் வரை அனைவரும் ஆயுத ரீதியான போராட்டமானது முஸ்லீம் சமூகத்தை அழித்துவிடும் என்ற தங்களின் தீர்க்க தரிசனமான நிலையை இளைஞர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பாரிடம் வலிமையாக முன்வைத்தனர். அத்துடன் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுத போராட்டத்தில் இணைந்து செயற்படுவது முஸ்லீம் சமூகத்தால் அங்கிகரிக்கப் படாமையால் அந்த இளைஞர்கள் இவ்வாறான போராட்டங்களில் அதிகமாக இணைந்து செயற்படுவது காலப்போக்கில் குறைக்கப்பட்டது.

மட்டுமல்லாது தமிழர் போராட்ட அமைப்புக்கள் தங்களுக்குள்  மோதல்களில் ஈடுபட்டு வந்ததும் முஸ்லீம்கள் இளைஞர்கள் இந்த இயக்கங்களில் இருந்து வெளியேற காரணமாக இருந்தது. மேலும் இயக்கம்களில் பெயர் சொல்லக்கூடிய பல இளைஞர்கள் தங்கள் பங்களிப்பைச் செய்துவந்தனர் என்றாலும் பின்னாட்களில் அவ்வாறானவர்களில் புலிகளுடன் செயற்பட்ட பலர் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

முஸ்லீங்கள் தனது இயக்கத்தில் இணைத்து செயற்படுவதை புலிகளின் தலைவர் பிரபாகரன் உடன்பாடில்லாதவராக இருந்தார். பின்னாட்களில் இந்த பிழை தங்களுக்கு எதிர் காலத்தில் பாரிய தாக்கத்தினை ஏற்படுபடுத்தும் என்ற உணர்வுடன் முஸ்லீங்களை இயக்கத்தில் இணைத்து அவர்களுக்கு முஸ்லீம் பகுதிகளில் பொறுப்பாளர் பதவிகள் வழங்கி அவர்களை கவர ஒரு காலத்தில் புலிகள் இயக்கம் முற்பட்டது.

அத்தகைய சந்தர்பங்களிலெல்லாம் அத்தகைய முஸ்லீம் சமூகத்தை சார்ந்த புலி இயக்க உறுப்பினர்களை முஸ்லீம் சமூகம் அங்கீகரிக்க மறுத்தபோது கோபமடைந்த பிரபாகரன் முஸ்லீம்களை தங்கள் தாயக பிரதேசங்களை விட்டு துடைத்தெறிந்து விட்டு தனி இராச்சியம் அமைக்கலாம் என தீர்மானித்து முஸ்லீம்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை இற்றைவரை தொடர்கின்றது.

இவ்வாறான புலிகளின் முஸ்லீம்களுக்கெதிரான செயற்பாடே இஸ்லாமியர்கள் தங்களை தனியான இனமாக அடயாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எழுச்சியை உருவாக்க உதவியது. இந்த காலங்களில் முஸ்லீம்கள் மீது புலிகளால் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடாத்தப் பட்டபோது கேட்பாரற்று கிடந்த இந்த சமூதாயம் தங்களின் சமூகத்தில் இடைவெளியாக இருந்த இடங்களை நிரப்ப முற்பட்டது.

தனி வியாபார சமூகமாக இருந்த முஸ்லீம் சமூகம் கல்விச் செயற்பாடுகளில் அக்கறை கொண்டது மட்டுமல்லாது அரசியலில் புதிய பாதைகளை திறந்து பயனித்தது. இதனால் புலிகள் பின்னாளில் மிகவும் காத்திரமான எதிரலையை இஸ்லாமிய சமூகத்தினால் எதிர்கொண்டனர்.

மேலும் முஸ்லீம்களின் கல்வி மற்றும் கலாச்சார முன்னேற்றங்களுடன் அவர்கள் சொந்த நிலங்களை விட்டு விரட்டப்பட்டபோதும் உயிர் கேள்விக் குறியாக்கப் பட்டபோதும் மிகவும் துணிச்சலாக சொந்த நாட்டில் இருந்து செயற்பட்டதானது காலப்போக்கில் காத்திரமான ஒரு சமூக அமைப்பைப்  தோற்றுவித்தது.

இந்த இடத்தில் தமிழர்கள் மிகவும் பாரிய தவறொன்றைச் செய்தனர் அது அவர்களில் அதிகளவானவர்கள்  புலம்பெயர்ந்து சென்றதாகும். தமிழர்களில் இருந்த பெரும்பாலன புத்தி ஜீவிகள் மற்றும் படித்தவர்கள் புலம்பெயர்ந்து சென்றபோது அவர்கள் வகித்த பதவிகள் மற்றும் அவர்கள் தங்களால் இலங்கையில் கட்டிக் காத்துவந்த பெருமைகள் மற்றும் உயர் அரச பதவிகளும் அரசியல் கதிரைகளும் சிங்களவர்களாலும் சில இடங்கள் முஸ்லீம்களாலும் நிரப்பப்பட்டன. ஆகவே தமிழர்கள் நிலை இலங்கையில் இன்னும் பரிதாபத்துக்குரியதாக சென்று கொண்டிருப்பதை உணராமல் அவர்கள் புலம்பெயர்ந்து சென்றதானது அவர்களுக்கு இலங்கை மண்ணில் இருந்த உரிமையை அவர்களே மறுப்பதைப்போல அமைந்தது. மற்றுமல்லாது சிங்கள அரசாங்கங்கள் தங்களுக்கு வாய்பாக அனைத்தையும் தன்னகத்தே மாற்றிக்கொள்ள வழிசமைத்தது.

இலங்கை வாழ் தமிழர்கள் புலம் பெயரத் தலைப்பட்டபோது பெரும்பாண்மை சமூகத்தினர் மிகவும் சந்தோசம் அடைந்தனர் காரணம் அவர்கள் மீண்டும் மீள்வது முயற்கொம்பு என்பது அவர்களுக்குத் தெரியும். தமிழர்கள் தங்களின் தலைமீது தாங்களே மண்ணை அள்ளிப்போட்டுக் கொண்டனர். என்பதுடன் தமிழர்கள் புலம்பெயர்ந்த  இடைவெளியால் அவர்களின் உரிமைகள் இலங்கையில் படிப்படியாக கேள்விக் குறியாக்கப்பட்டது.

இரண்டாவது மிகப் பெரும் தவறாக தாங்கள் முன்னெடுத்த ஆயுத போராட்டத்தை தங்களுக்கானதாக மட்டும் மட்டுப் படுத்திக்கொண்டதும் மிக நீண்ட காலத்திற்கு அதனை இழுத்துச் சென்றதையும் குறிப்பிடலாம். காரணம் மனித குல வரலாற்றை நோக்கும் போது மூன்று தாசாப்தங்கள் என்பது மனித வாழ்விலும் மானிட வளர்ச்சியிலும பாரிய மாற்றங்களை ஏற்படுத்தவல்லது. நீண்டகாலமாக போராட்டம் தொடரப்படும் போது அந்தப் போராட்ட சிந்தனை நாகரீக வளர்சியினால் அந்த சமூகத்தால் சிதைக்கப் பட்டுவிடுவது சாத்தியமானதொன்றாகும்.

அத்துடன் பலம்மிக்க தமிழர்களில் ஒரு பெரும்பகுதி புலம்பெயர்ந்து சென்றுவிட  போராட்டம் நீண்டதாக அமைவது மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் காரணம் அந்த போராட்டத்தில் இணைந்து செயற்பட அம்மக்கள் நிச்சயம் மறுப்புத் தெரிவிப்பர் மட்டுமல்லாது காலம் செல்லச் செல்ல ஆரம்பித்த காலத்தைவிட கூட இருந்து போராடும் போராளிகள் குறைந்து கொண்டே செல்வர் இத்தகைய சூழலில்  அந்தப் போராட்டம் தோல்வியை தழுவுவதை யாரும் தடுக்க முடியாது.

இதே நிலையில் தமிழர்கள் புலம்பெயராமல் அந்த நாட்டுக்குள்ளேயே தங்களின் உரிமைகளுக்காக போராடியிருப்பார்களானால் அரசியலிலும் மற்றும் சகல துறைகளிலும் காலப்போக்கில் வளர்ச்சிப் போக்கே காணப் பட்டிருக்கும் அத்துடன் போராட்டத்தின் வலுவும் இணையும்போது தமிழர்களுக்கான தாயகம் தானாக அமைந்திருக்கும் எனபதே உண்மை.

இந்தத் தவறை முஸ்லீம் சமூகமும்  செய்ய முற்பட்டபோது அங்கிருந்த புத்திஜீவிகளால் அது தடுக்கப்பட்டது மட்டுமல்லாது தங்கள் நாட்டை விட்டு யாரும் வெளியே செல்லக் கூடாது என பல பிரச்சாரங்கள் மேற்கொள்ளப் பட்டது இதன் காரணமாக முஸ்லீம்கள் இலங்கை அரசியலில் காலப் போக்கில் அதிக வளர்ச்சி கண்டனர் என்பதுடன் பேரம் பேசும் சக்தியாகவும் தங்களை மாற்றிக் கொண்டனர்.

இவ்வாறான ஒரு வளர்ச்சி இல்லாதிருப்பின் அரசியல் ரீதியாக பெரும்பான்மை இனத்தைவிட சகல துறைகளிலும் பலமாக இருந்த தமிழ் சமூகத்தையே அங்கீகரிக்க மறுத்த பெரும்பாண்மை ஆட்சியாளர்களின் பிடியில் முஸ்லீம்கள் ஒரே நொடியில் நசுக்கப்பட்டிருப்பர். தமிழர்கள் புலம் பெயர்ந்து சென்றது முஸ்லீம்கள் தங்களை மீளமைத்துக் கொண்டதும் முஸ்லீம்களை பலமான சக்தியாக மாற்றியது.

இன்று அரசியலில் தொடங்கி சகல துறைகளிலும் தமிழ் தரப்புக்கு நிகரான நிலையில் இலங்கையில் முஸ்லீம்கள் இடம்பிடித்துள்ளனர். இது ஒரு குறித்த பிரதேசத்தை சேர்ந்த சமூகம் விழித்துக் கொண்டதன் விளைவாக முழு முஸ்லீம் சமூகத்திலும் வழிப்புணர்ச்சியை உருவாக்கியது.

இத்தகைய மீளமைக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்தைக் கொண்ட ஒரு சூழலில்தான் தற்போது தமிழ்பேசும் மக்களுக்கான அரசியல் தீர்வு என்ற ஒன்று முன்வைக்கப்பட வேண்டியுள்ளது. ஆகவே இத்தகைய தருணத்தில் தமிழ் பேசும் தரப்பாரில் ஒரு சாரார் புலம்பெயர் தேசங்களில் இருந்து கொண்டு நாட்டில் வாழும் தமிழ் அரசியல் சக்திகளுடன் இணைந்து பழைய அரசியல் முன்மொழிவுகளின் அடிப்படையில் தீர்வுகாணப்பட வேண்டும் என்ற கருத்து வெளிப்பாடானது ஏற்றுக் கொள்ளக்கூடியதாக அமையப் போவதில்லை.

இலங்கையில் இதுவரை காலமும் யுத்த அணர்த்த்துக்குள் வாழ்ந்து வந்த தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் மற்றும் தோட்டத் தொழிளாலர்களும் ஏனைய சமூகத்தவர்களும் மிகவும் சிக்கலான பல பிரச்சினைகளை தங்கள் வாழ்ந்துவரும் காலத்தில் எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் அனைவரின் வலிகளும் தீர்க்கப்படும் வகையில் புதிய அரசியல் தீர்வுத் திட்டமானது அமைய வேண்டும் இல்லையேல் தொடர் இரத்த ஆறு ஒடுவதை இலங்கையில் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இந்த அரசியல் தீர்வு திட்டத்தில் ஒரு தரப்பினர் திம்புப் பேச்சுவார்தையின் அடிப்படையில் தீர்வுகாண்ப்பட வேண்டும் எனக் கூறுகின்றனர் இந்த திம்புப் பேச்சுவார்த்தை முனவைக்கப்பட்ட வேளையும் தற்போதைய சூழலும் ஒவ்வா முனையாக உள்ளமையை அத் தரப்பினர் புரிந்துகொள்வது இன்றியமையாத்தாகும்.

திம்புப் பேச்சுவார்த்தை 1985ம் ஆண்டு யூலை மாதம் 08ம் திகதி பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்புவில் இந்திய மத்திய அரசின் அனுசரனையுடனும் மேற்பார்வையுடனும் இலங்கையில் ஆயுத போராட்டத்தை முன்னெடுத்து வந்த ஐந்து இயக்கங்களின் கூட்டணிக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் நடைபெற்றது. இதில் இலங்கை  அரசின் சார்பில் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெவர்தனாவின் சகோதர்ர் எச். டவ்ளியூ.ஜெவர்தானா கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் நாலு விடயங்கள் கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன அவையாவன தமிழர்களை தேசிய இனமாக அங்கீகரித்தல், தமிழ் இனத்தின் தாயகத்தை அங்கீகரித்தல், தமிழ் தேசியத்தின் சுய நிர்ணய உரிமையை அங்கீகரித்தல், இலங்கையில் உள்ள தமிழர்கள் அனைவருக்கும் குடியுரிமை வழங்குவது கோரிக்கைகளாக முன்வைக்கப்பட்டன.

 இக்காலப் பகுதியில் தமிழர்கள் என்ற வட்டத்துக்குள் முஸ்லீம்கள் உள்ளடக்கப் பட்டதாக கூறப்பட்டாலும் முஸ்லீம் சமூகத்தை பிரதிபலிக்கும் யாரும் இத்திட்ட வரைவில் இடம் பெற்றிருக்கவில்லை அங்கே முஸ்லீம்கள் என்ற ஒரு சாரார் இனம் காட்டப்படவும் இல்லை எனலாம்.

 இந்தப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க போராட்டிக் கொண்டிருந்த ஐந்து அமைப்புக்களின் முன்மொழிவாகவே பார்க்க முடியும். காரணம் இதில் இக் குழுக்களை சாராத தமிழ் புத்திஜீவிகள் மற்றும் சமூகம்களை பிரதிநிதிப் படுத்தும் தலைவர்கள் எவருமிடம் பெற்றிருக்கவில்லை.சுருக்கமாக சொல்வதானால் இப் பேச்சுவார்தையானது தமிழ்பேசும் முழுச் சமூகத்தின் குரலாக இருக்கவில்லை என்றால் அது மிகையாகாது.

 இலங்கை வரலாற்றில் தமிழர் தரப்பாரால் இதுவரை காலமும் முன்வைக்கப் பட்டிருந்த அனைத்து அரசியல் யோசனைகளிலும் இத்தகைய குறைகள் இருந்தே வந்துள்ளமையால் அவ்வப்போது ஆட்சியிலிருந்த ஆட்சியாளர்களால் அவற்றை தட்டிக் கழிக்க எதுவாகவிருந்தது .

 இத்தனை வருடகால அனுபவத்தின் பின்னரும் இதுபோன்ற குறைபாடுகள் தமிழ்பேசும் சமூகத்தினரால் சீர்செய்யப்படாதது மட்டுமல்லாது இதுவரை முன்வைக்கப்பட்டிருந்த அனைத்து அரசியல் தீர்வுத் திட்ட யோசனைகளிலும் தமிழ்பேசும் தரப்பாரில் ஏதோ ஒரு சமூகத்தினர் புறம் தள்ளப்பட்டே வந்துள்ளனர். இவ்வாறான குறைபாடுகளினால்தான் இத்தகைய அரசியல் திட்டங்கள் தொடர் தோல்வியைத் தழுவியது.

 நாம் தமிழர்கள் என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டாலும் நமக்குள் பல சமூகங்கப் பிரிவுகள் காணப்படுகின்றன அரசியல் ரீதியாக தீர்வுத் திட்டம் ஒன்று முன்வைக்கப் படும்போது அது இதில் வாழும் ஒரு சமூகத்தை பலி கடாவாக்குவதைப் போல இருக்குமாயின் அது நிச்சயம் நம் நாட்டில் வெற்றியடையப் போவதில்லை என்பது திண்ணம்.

 தொடரும்...