This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

17 அக்டோபர், 2009

அக்கினி இடித் தாக்கம்

அக்கினி இடித் தாக்கம் 
அசுர வல்லமை ஊக்கம்
அப்படிப்
பொறுமை யற்ற புயலினிலே
புதுநெறி படைக்க வேண்டி
புறப்படும் எமது கனவுகள்.

இன்று டாக்டர், பாரத ரத்னா, பாரத விபுசன், ராக்கெட் பிதாமகன், கவிஞர், அனு விஞ்ஞானி அபுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமுக்கு எழுபத்தெட்டாவது பிறந்த தினம்.

(இன்று உலக மக்கள் தங்கள்  கைகளை கழுவும் தினமும் கூட உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்படி ஆண்டுக்கு 35 இலட்சம் குழந்தைகள் தங்கள் ஐந்தாவது பிறந்த தினம்வரை உயிருடன் வாழ்வதில்லை இந்தக் குழந்தைகள் வயிற்றொட்டம் மற்றும் நிமோனியா போன்றவற்றால் இறந்து விடுகின்றன காரணம் சாப்பிடு முன்பும் மற்றும் மலம் கழித்த பின்னரும் நன்றாக கைகளை சவர்காரத்தால் கழுவாமையாளாகும் என்கிறது அந்த நிறுவனம்.)
கரிகாலன் முடியாது என்று நினைத்திருந்தால் தமிழ்நாட்டில் கல்லணை கிடையாது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை எதிர்க்க முடியாது என்று காந்தியடிகளும், சுதந்திர போராட்ட வீரர்களும் நினைத்திருந்தால், நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்காது. சி.சுப்பிரமணியமும், எம். எஸ். சுவாமிநாதனும் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு அடைந்து இருக்காது. வர்கீஸ் கொரியன் முடியாது என்று நினைத்திருந்தால் இந்தியா வெண்மை புரட்சியில் வெற்றி அடைந்து இருக்காது. விக்ரம் சாராபாய் முடியாது என்று நினைத்திருந்தால் இன்று செயற்கைக்கோளை இந்தியா ஏவியிருக்க முடியாது. 

முடியாது என்ற நோய் நம்மிடம் பல பேரிடம் அதிகமாக உள்ளது. முடியும் என்று நம்பும் மனிதனால்தான் வரலாறு படைக்கப்பட்டு இருக்கிறது. என்று தன்னம்பிக்கையூட்டும் குரல்.

எளிமை, வலிமை, திறமை, முதிர்ச்சி, ஆராச்சி, ஆளுமை, வீரம், விவேகம், மதிப்பு என்பவைகளையெல்லாம் உலகத்து மக்கள் இவரிடம் கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள மதராசு மாநிலத்தின் (1967ம் ஆண்டுக்குப் பின் தமிழ் நாடு) தெற்கிலுள்ள ராமேஸ்வரத்தின் மசூதி தெரு (பள்ளிவாயல் வீதி) வில் அக்டோபர் மாதம் பதினைந்தாம் திகதி 1931ம் ஆண்டு ஆஸியா உம்மா அபுல் பக்கீர் ஜெய்னுலாப்தீன் குடும்பத்தினருக்கு மகனாக பிறந்தார். பிள்ளைக்கு பெற்றோர் இட்ட பெயர் அப்துல் கலாம் (அரபி மொழியில் அப்வ்து என்றால் கடவுளின் அடிமை என்றும் கலாம் என்றால் பேச்சு அல்லது வார்த்தை என்றும் பொருள்.) அடிமையின் வார்தை என்று இதற்குப் பொருள்.

அங்குள்ள ஸ்வார்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தவர். திருச்சி ஸெயின்ட் ஜோஸ·ப் கல்லூரியில் விஞ்ஞான அடிப்படைக் கல்வியைக் கற்றவர். தனது சிறப்புப் பொறிநுணுக்க டாக்டர் பட்டப் படிப்புச் சென்னை பொறியியல் துறைக் கல்லூரியில் [Madars Institute of Technology] சேர்ந்து (1954-1957) விமானவியல் எஞ்சினியரிங் துறையை [Aeronautical Engineering] எடுத்துக் கொண்டார். பட்டப் படிப்பின் போதே பெங்களூரில் உள்ள ஹிந்துஸ்தான் விமானத் தொழிற்கூடத்தில் [Hindustan Aeronautics Ltd] பயிற்சிக்குச் சேர்ந்தார். அங்கே விமானங்களை இயக்கும் பிஸ்டன் எஞ்சின், டர்பைன் எஞ்சின், ஆர அமைப்பு எஞ்சின் [Piston, Turbine & Radial Engines] ஆகியவற்றில் அனுபவம் பெற்றார்

இன்று உலகில் பலதரப்பட்ட மதம்கள், மார்க்கம்கள், மொழிகளை பேசும் மக்களுடன் ஆத்திகர்கள், நாத்திகர்கள், துறவிகள் என பல தரப்பார் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை ஒத்துக் கொள்பவர்களாகவே இருக்கிறன்றனர் அது இந்த உலகை இயக்க ஒரு சுப்பர் பவர் உண்டு என்பதாகும். அதை மதமாக பின்பற்றுபவர்கள் கடவுள், இறைவன், இயசு, அல்லாஹ், சிவன் என பல பெயர்களிலும் நாத்திகர்கள் நீங்கள் சொல்லும் கடவுள்களை நாங்கள் நம்பவில்லை அவைகளை விட்டு அவர் புனிதமானவர் என்றும் ஏதோ ஒரு வடிவத்தில் அல்லது பெயரில் ஏற்றுக் கொள்கின்றனர்.

இதனாலோ என்னவோ அப்துல் கலாம் என்ற பெயரிடப்பட்ட இந்தக் குழந்தையும் உலக மக்கள் அனைவராலும் ஹிரோவாக பின்நாட்களில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோளானார், இந்திய இளைஞர்கள் மத்தியில் இருந்து வந்த கல்விகற்ற புத்திசாலிகள் வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டும் என்ற  மோகத்தை துடைத்தெரிந்து தாய் நாட்டுக்காக உழைக்க வேண்டும் என்பதை வேரூண்டச் செய்தார்.

படிக்கும் மாணவர்களுக்கும் உழைக்கும் இளைஞர்களுக்கும் விளையாடும் குழந்தைகளுக்களையும் கனவு காணச் சொன்னார்.  இந்தியாவின் வளர்ச்சியிலும் அது தன்னகத்தே கொண்டுள்ள செல்வங்களிலும் அதிகம் நம்பிக்கை கொண்டவர் இவர்.

பாரதியையும் பாரதிதாசனின் தன் ஆத்மார்தமாக கொண்டார் மில்டனும் ரவிந்திரநாத் தாகூரும் அவரால் அதிகம் நேசிக்கப் பட்ட கவிஞர்கள்.  வாழ்கையின் இளம் பிராயத்திலேயே அம்மாவிடம் இருந்து கருணையையும் அப்பாவிடமிருந்து நேர்மையையும் கற்றுக் கொண்டார்.

அவர் எழுதிய அக்கினிச் சிறகுகள் ( The wings of Fire) புகழ் பெற்ற ஒரு சுயசரிதை அதில் தனது சாதனைக்கு பக்கபலமாக இருந்த விஞ்ஞானி சத்தீஸ் தவானைப் பற்றி எழுதிய வரிகள் இவரின் குணத்திற்கும் அவரின் குருவிற்கும் பெருமை.

"1979ம் ஆண்டு எஸ்.எல்.வி. ராக்கெட் பரிசோதனைக்காக அத்தனை பேரும் மும்முரமாக வேலை செய்து கொண்டிருந்தோம். நான் அந்த ப்ராஜெக்டின் இயக்குநர். பிரதமரில் இருந்து ராணுவ அமைச்சர் வரை நாட்டின் எல்லோருடைய கவனமும் அந்த ராக்கெட் மீதே இருந்தது.

ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. ஒன்று, இரண்டு என்று சில கட்டங்களை நாங்கள் வகுத்துக் கொடுத்தபடி ஒழுங்காகச் சென்ற ராக்கெட் அதற்கு மேல் தடுமாற ஆரம்பித்து கடலில் விழுந்து படுதோல்வி அடைந்தது. அப்போது எங்கள் உயரதிகாரியான போராசிரியர் சத்தீஷ் தவான் உடனடியாக பிரஸ்மீட் நடக்கும் இடத்துக்கு வருமாறு எனக்கு அவசரச் செய்தி அனுப்பினார்.

"
போச்சு! எல்லோர் நடுவிலும் நம் மானம் கப்பல் ஏறப்போகிறது' என்று நினைத்துக்கொண்டே போனேன். ஆனால் அங்கு எனக்கு வேறுவிதமான அனுபவம் காத்திருந்தது. அங்கே நிருபர்கள் பல சங்கடமான, காயப்படுத்தும் கேள்விகளைக் கேட்டனர். அவர்களிடம் என்னையும் என் டீமையும் விட்டுக் கொடுக்காமல் பேசினார் சத்தீஷ் தவான். எங்கள் தரப்பு நியாயங்களை புரிய வைத்தார். சுருக்கமாகச் சொன்னால் எங்களுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போல செயல்பட்டார்.

சில கால இடைவெளிக்கு பிறகு மீண்டும் அதே பரிசோதனை. இப்போது எஸ்.எல்.வி.3 வெற்றிகரமாக ரோகிணி செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்தியாவின் முதல் பெரிய வெற்றி அது. எல்லோரும் ஆனந்தக் கூத்தாடினோம். சத்தீஷ் தவான் என்னை அழைத்து, "நீயும் உன் டீமும்தான் இந்தச் சாதனைக்குக் காரணம். நீ போய் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்து' என்று அனுப்பி வைத்தார்.

கல்லடி வந்தபோது முன்னே போய் தாங்கிக் கொண்டவர், பூமாலை வந்தபோது என்னை முன்வரிசைக்குத் தள்ளியது சிலிர்க்க வைத்தது. ஒரு டீம் லீடர் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவரிடம்தான் கற்றுக் கொண்டேன். என்றார்.

தாய் நாட்டின் மீதும் அதனைக் குறை கூறுபவர்கள் மீதும் அதிக கோபம் அவருக்கு அவர் சொன்ன அந்த வார்தைகள் தாய்நாட்டின் மீது குறைகூறுகின்ற நமக்கும் பொருந்தும்

நமது அரசாங்கம் திறமையற்றது என்று நீங்கள் சொல்கிறீர்கள். நம் திட்டங்கள் பழையவை என்று சொல்கிறீர்கள். நகராட்சிக்காரர்கள் குப்பையை ஒழுங்காக அள்ள மாட்டேன் என்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். இந்தியா ஒரு நரகம் என்று சொல்கிறீர்கள். எப்போதும் சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். இதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?

சிங்கப்பூரில் நீங்கள் இருந்தால், சிகரெட் துண்டைத் தெருவில் எறிய மாட்டீர்கள். துபாயில் இருக்கும்போது ரமலான் மாதத்தில் பொது இடத்தில் உண்ண உங்களுக்கு தைரியம் வராது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து கடற்கரையில் குப்பைத்தொட்டி தவிர, வேறு எங்கும் குப்பையை எறிய மாட்டீர்கள். பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் போலிச் சான்றிதழ் வாங்க முயற்சிக்க மாட்டீர்கள்.

இப்படியெல்லாம் வெளிநாடுகளில் ஒழுங்குகளை மதிக்கத் தெரிந்த உங்களால், உங்கள் சொந்த நாட்டின் ஒழுங்குகளை மதிக்க முடியவில்லையே, ஏன்?

ஓர் அரசாங்கத்தை தேர்ந்தெடுக்க ஓட்டுச் சாவடிக்குப் போவதோடு நம் பொறுப்பை உதறிவிடுகிறோம். நம் பங்களிப்பு எதுவுமே இல்லாமல் அரசாங்கமே நமக்காக எல்லாவற்றையும் செய்து தரவேண்டுமென்று எதிர்பார்க்கிறோம். அரசாங்கம் சுத்தம் செய்யவேண்டும் என்று விரும்புகிறோம். ஆனால், நாம் குப்பை போடுவதை நிறுத்தமாட்டோம்.

ஒவ்வொருவரும் நம் நாட்டைத் தவறாகவே உபயோகித்துக் கொள்கிறோம். நமது மனசாட்சி அடகு வைக்கப்பட்டிருக்கிறது.

காற்றைக் கிழித்து வானில் இந்தியாவிற்கு வேலியமைத்த இந்த ராக்கெட் மகனின் சிறுவயதில் நீங்கள் ராக்கெட் விட்டிருக்கிறீர்களா என்று சன் தொலைக்காட்சிக்காக விவேக் கேட்டபோது

1931 ம் ஆண்டு தொடக்கம் 1941 ம் ஆண்டுவரை 10 வயது எனக்கு அந்தக் காலத்தில் ராக்கெட்டெல்லாம் கிடையாது ஐயா நான் கோவில் திருவிழாக் காலங்களில் ஆண் பனையின் பூ அது காய்ந்து விழுந்ததை தோட்டத்தில் புறக்கி அதன் ஒரு பக்கத்தில் தீபத்துடன் மத்தாப்பை வைத்து மேலே எறிவேன் அது ராக்கெட் மாதிரி பறக்கும் என ஒரு சிறு குழந்தையாக கதை சொன்னார்.

புனிதக் குர்ஆனைக் கறைத்துக் குடித்தவர் அடிக்கடி பகவத் கீதையையும் ஞாபகத்தில் வைத்துப் பேசக் கூடியவர் திருக்குறல் அவருக்கு அத்துப்படி கருணாடக இசை மற்றும் வீணை வாசிப்பதிலும் ஞானி இவர்.

தன்னம்பிக்கையை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் ஊட்டியதால் அவர்களின் மனதில் ஒரு தீப்பொறியாய் ஆனவர். தீவிரவாதத்தையும் வன்முறையையும் எப்படி மக்கள் எதிர்கொள்வது என்று கேட்கப்பட்டபோது

எல்லோருக்கும் ஒன்று நான் சொல்ல விரும்புகின்றேன் கெட்ட மனங்கள் ஒன்று சேர்ந்து மக்கள் மீது தாக்குதல் நடத்தும்போது நல்ல மனங்கள் ஒன்று சேர்ந்து அதை எதிர்த்து செயற்பட வேண்டும் என்றார்.

தனது இளம் வயதில் தான் விமானப்படையில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்றவுடன் மனமுடைந்த அவர்கள் ரிஷிகேசில் சுவாமி சிவானந்தா அவர்களை சந்திக்கிறார்கள் சுவாமியவர்கள் டாக்டர் அப்துல் கலாமுக்கு கூறினார்கள்

உன் விதியை ஏற்றுக்கொண்டு, வாழ்க்கையில் முன்னேறிச் செல்; விமானப் படையில் நீ சேர்ந்து வேலை செய்யக் கூடாதென்று விதி யுள்ளது. நீ என்ன செய்யப் போகிறாய் என்பது இன்னும் நிர்ணயமாக வில்லை. ஆனால் என்ன நீ பண்ணப் போகிறாய் என்னும் விதி ஏற்கனவே நிச்சமாக்கப் பட்டுள்ளது. நீ புரிய வேண்டிய பணிக்கு அவசியம் இருப்பதால் விதியிட்ட பாதைக்கு உன்னை அழைத்துச் செல்கிறது. ஆகவே உனது இந்த தோல்வியை மறந்திடு. உனது பிறப்பின் மெய்யான காரணத்தை எண்ணித் தேடிச் செல். உன்னோடு நீ ஒன்றாய் ஒன்றிக்கொள்! கடவுளின் விருப்பத்திற்கு நீ சரணடைவாய்

இந்த நல்ல உபதேசம் இன்றும் டாக்டர் அப்துல் கலாமைப் படிக்கும் ஒவ்வொறுவரும் தங்களுக்கு கூறப்பட்டதாகவே நினைக்கின்றனர்

இலவசமாக உலக மாணவர்களுக்கு பாடம் நடாத்தும் மாமேதை, நாட்டின் தன்மானம் காத்த விஞ்ஞானி, ஜனாதிபதி மாளிகையில் சொந்த செலவில் குடும்பத்தினருக்கு உணவளித்த ஜனாதிபதி, இரண்டு சூட்கேசுடன் வந்து அதே இரண்டு சூட்கேசுடன் ஜனாதிபதி மாளிகையை விட்டுச் சென்ற அரசியல் வாதி.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து ஏழையாகவே வாழ துணிவு கொண்டவர் இந்தியாவை குறித்து கனவு கண்டவர். அவர் தனது இளம் பயதில் படிப்புச் செலவுக்காக தினசரிப் பத்திரிகை விற்றார். இன்று அவரின் பெயரைப் போட்டால் பத்திரிகைகள் அதிகம் விற்கின்றன.

கனவு காண், கனவு காண், கனவு காண், பின்னால் கனவுகளை எண்ணங்கள் ஆக்கிப் பிறகு செய்கையாக்கு. சிந்தனை செய்வது பேரளவில் இருக்க வேண்டும். நமது தேசத்தின் ஜனத்தொகை நூறு கோடி. ஆகவே உன் சிந்தனைகள் நூறு கோடி மக்களுக்குத் தகுதி பெற்றதாய் அமைய வேண்டும். அப்படிச் செய்தால்தான் பேரளவில் நாம் முன்னேற முடியும்.

தமிழினச் சிந்தனைச் சிற்பிக்கு ஈழத்தமிழ் மக்களின் பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் இன்னும் பல சாதனைகள் புரிந்திட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்திக்கின்கின்றோம்.


ஆக்கம்
கிழக்கான் ஆதம்
14.10.2009

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக