This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

30 மே, 2009

குடுமிபிடிச் சண்டை ஆரம்பம்.


சீமை அழியுதுண்ணு நான்
சிந்தையிலும் எண்ணலியே!,
சீமை அழியலியே-என்
சிறப்பழிஞ்ச மாயமென்ன?
மருத அழியுதுண்ணு நான்
மனசிலேயும் எண்ணலியே!
மருத அழியலியே-என்
மதிப்பழிஞ்ச மாயமென்ன? (நாட்டார் பாடல்)

இந்த மாதம் பதினேழாம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களான அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், சூசை, புலித்தேவன், இளந்திரயன் உற்பட சகல முதல்மட்ட மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களும் இலங்கையின் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காணாமல்போயிருக்க பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருந்தார்.

19 மே, 2009

தலைவருக்கு வீர வணக்கம்! படையினருக்கு நன்றிகள்! ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்! -கிழக்கான் ஆதம்-

ஈழ மக்களின் போராட்ட வரலாற்றை திசைதிருப்பிய மாபெரும் மனிதர் சில தினங்களுக்கு முன் தனது முடிவை நிரூணயித்துக் கொண்டார். தனியாக தமிழருக்கு நாடு பெற்றுத் தருவதாக கூறிய இவர் இன்று தமிழர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து நடைபிணங்களாக அவர்களை மாற்றிவிட்டு போராடி உயிர்நீத்தார்.

வீரவணக்கம்
படுகொலைக் கலாச்சாரத்தை தமிழருக்குள் விதைத்து இன முரண்பாடுகளைத் தூண்டி இலங்கை மக்களை தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் என பாகுபடுத்தி  பேதமேற்படுத்திய ஜனநாயகவாதிக்கு வீரவணக்கம்.
வாசலில் மண்கூட்டி நேசத்துடன் கைகோர்த்து பாசத்துடன் பழகிய சின்னம் சிறுசுகளை இரத்த வாசத்துடன் இறுகிய உள்ளத்துடன் இயங்கவைத்துக் கொண்டிருந்த இயந்திர துப்பாக்கிதாரிக்கு எங்கள் வீரவணக்கம்

13 மே, 2009

புலிகளின் தமிழீழம் சாத்தியமா?

பசி தாங்க முடியாத எலிகள் இரண்டு தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமயல் அறைக்குள் புகுந்தன. அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அது உயரமான பானை. இதனால் பாலைக் குடிக்க முடியாமல் எலிகள் திண்டாடின.

இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது. அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது: "போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

12 மே, 2009

புலிகள்தான் மக்கள் மக்கள்தான் புலிகள்

சாத்திரம் கற்றறியாத சாமியார் தானாகி
ஆத்திதேட நினைத்து – ஞானம்மா
அலைவார் வெகுகோடி
பூச்சும் வெறும் பேச்சும் பூசையும் கைவீச்சும்
ஏச்சுக்கு இடந்தானே- ஞானம்மா
ஏதொன்றும் இல்லையடி
களத்தை அலங்கரித்துப் பெண்கள் தலைவிரித்து
கணக்கைத் தெரியாமல் – ஞானம்மா
கலங்கி அழுதாரடி
மேளங்கள் போடுவதும் வெகுபேர்கள் கூடுவதும்
நாளை எண்ணாமலல்லோ – ஞானம்மா
நலித்தே அழுவாரடி 
(புண்ணாக்குச் சித்தர் - சித்தர் பாடல் தொகுப்பிலிருந்து)

இன்று விடுதலைப் புலிகளின் புகலிடமாகத் திகழும் புலம்பெயர் புலிகளின் ஆதரவாளர்களின் மூளைகளுக்கு பாசிச ஆய்வாளர்களினாலும் பாசிச உ(பு)ணர்ச்சிக் கவிஞர்களாலும் உட்புகுத்தப்பட்டுள்ள சொல்லியல் வாதம்தான் “மக்கள்தான் புலிகள் புலிகள்தான் மக்கள்” என்ற கோஷமாகும்.

29 ஏப்ரல், 2009

பன்றிக் காய்ச்சல் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine influenza) -கிழக்கான் ஆதம்-

“Thou shall not kill. Thou shall not commit adultery. Don't eat pork. I'm sorry, what was that last one?? Don't eat pork. God has spoken. Is that the word of God or is that pigs trying to outsmart everybody?”
-Jon Stewart  American Actor and Comedian(1962)- 

இன்று மிகவேகமாக பரவி உலகை உலுக்கிக் கொண்டிருக்கும் பன்றிக் காய்சல் (Swine flu) எனப்படும் ஸ்வைன் ப்ளூயென்ஸா (Swine fluenza) மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் ஒரு வைரஸாக இன்று விஞ்ஞானிகளால் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வகை வைரஸ் காய்ச்சல் பன்றிகளில் இருந்து தோன்றி இன்று மனிதர்களின் உடலை சல்லடையாக்கிக் கொண்டிருக்கிறது. உலகில் அதிகமான பன்றிப் பன்னைகள் ஐரோப்பிய நாடுகளிலேயே காணப்படுகின்றன பன்றி இறச்சி அதிகமாக ஐரோப்பிய நாடுகளில் உண்ணப்படுவதோடு உணவுக்காகவே இந்தப் பன்றிப் பண்ணைகள் நிறுவகிக்கப் பட்டுவருகின்றன.

28 ஏப்ரல், 2009

“தலைவர் சொல்லாமல் அடிப்பதை ஜனாதிபதி சொல்லியடித்தார்” -கிழக்கான் ஆதம்-

“இனி நான் சும்மா இருக்க மாட்டேன்! இந்த ஆண்டு பெப்ரவரி இருபத்தி மூன்றாம் திகதி ஜெனிவாவில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்தைக்குப் பிறகு புலிகள் இருபது குண்டுவெடிப்புச் சம்பவங்களை நடத்தியிருக்கிறார்கள் நாற்பத்தேழு இராணுவ அதிகாரிகளையும் இருபத்தெட்டு அப்பாவி மக்களையும் கொன்றிருக்கிறார்கள் நூற்றி முப்பத்தொன்பது பேருக்கு படுகாயம் ஏற்பட்டிருக்கிறது” 

-2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ம் திகதிய இரானுவத் தளபதி மீதான தற்கொலைத் தாக்குதலின் பின்னர் மேதகு ஜனாதிபதியாற்றிய உரையிலிருந்து-

நேற்றைய தினம் இருபத்தி ஆறாம் திகதி விடுதலைப் புலிகள் சர்வதேசத்தின் வேண்டுகோள்களை ஏற்று ஒருதலைப்பட்சமான யுத்த நிறுத்தத்தை மேற்கொள்வதாக அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பில் அவர்கள் இனி எப்போதும் வலிந்த தாக்குதல் எதையும் மேற்கொள்ள போவதில்லை (முடிந்தால் செய்யமாட்டார்களா? என்ன?) எனவும் காலவரையரையற்ற முறையில் இத்தாக்குதல்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்களின் சார்பு இணையத்தளங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

22 ஏப்ரல், 2009

தமிழரின் தாகம் தமிழீழ தாயகமா? -கிழக்கான் ஆதம்-

செய் தீவினை இருக்கத் தெய்வத்தை நொந்தக்கால்
எய்த வருமோ இரு நிதியம்? - வையத்து
அறும் பாவம் என்ன அறிந்து அன்று இடார்க்கு இன்று
வெறும் பானை பொங்குமோ மேல்! (நல்வழி, ஓளவையார்)

இலங்கையின் தமிழர்கள் வரலாற்றையும் புலிகளின் போராட்ட யுக்தியையும் நாம் நோக்குவோமானால் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என்றிருக்க அதுவே தமிழரின் தாகமா என்றால் “இல்லை” என்றுதான் சொல்ல முடியும்.

தமிழரின் தாகம் என்னவாக இருந்தது என்று நீங்கள் அறிய முற்படுவீர்களானால் நீங்கள் தமிழ்பேசும் அனைத்து சமூகங்களும் ஒன்றினைந்து அவர்கள் பரம்பரை பரம்பரையாக வாழும் பிரதேசத்தில் அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெற அவர்கள் முன்வைத்த கோரிக்கைகளையும் அவர்களின் வாழ்வியல் வரலாற்றையும் வைத்தே அதனை அறிய முடியுமே தவிர தனியே புலிகள் எனும் ஒரு பயங்கரவாத அமைப்பின் சுயநலக் கோட்பாடுகளையும் கோரிக்கைகளையும் அதற்குள் அடக்கிவிட முடியாது.

இதுரை காலமும் புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் என்று அவர்கள் சொன்னார்களே தவிர அவர்கள் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என்று சொல்லவில்லை இது சாதாரணமாக பார்ப்பதற்கு பெரிதாக தெரியாவிட்டாலும் கூர்ந்து நோக்குவோமாயின் அன்று சகோதர படுகொலை முதல் இன்று வன்னிமக்கள் சிறை பிடிக்கப்பட்டிருப்பது வரை அனைத்தும் இக்கோஷத்துக்குள் அடக்கப்பட்டிருப்பதை காண முடியும்.

புலிகளின் கொடி ஈழத்தில் வாழும் தமிழ் பேசும் மக்களின் சமூக கலாச்சார விழுமியங்கள் எதனையும் பிரதிபலிக்காது தனியே புலிகள் எனும் அமைப்பையும் அவர்களின் சர்வாதிகார போக்கையும் பிரதிபலிப்பது போலவே புலிகளின் கோஷமும் அந்த அமைப்பின் சுயேற்சை அதிகாரத் தன்மையை மட்டுமே வெளிக்காட்டுகிறது.காரணம் அவர்களின்  கொடியாயினும் சரி மற்றும் அவர்களின்  கோஷமாயினும் சரி எதுவும் ஈழப் பிரதேசத்தில் வாழும் மக்களின் பிரதிபலிப்பாக எப்போதும் இருக்கவில்லை.

உலகில் மிகவும் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு இனமாக கருப்பு இன மக்கள் இருக்கின்றனர் சில தசாப்தங்களுக்கு முதல் நாங்கள் நோக்குவோமானால் உலகில் எல்லாத் திசைகளிலும் இம்மக்கள் தங்கள் தோலின் நிறம் கறுப்பு என்பதற்காக மிகவும் கீழ்தரமாக நடத்தப்பட்டனர்.

அப்படிப்பட்ட மக்களின் விடுதலைக்காக போராடியவர்களில் “வண.மாட்டின் லூதர் கிங்கும்” தற்போதைய நமது காலத்தில் “நெல்சன் மன்டேலாவும்” உள்ளனர். வண.மாட்டின் லூதர் கிங் மறைந்துவிட்டாலும் அவரின் கனவு அமெரிக்காவில் மெய்ப்பிக்கப்பட்டுவிட்டது. 

அதேபோல்  இருபத்தேழு வருடங்கள் கறுப்பர்களின் உரிமைகளுக்காக ரோபன் தீவிலுள்ள (Robben Island) சிறையில் தனது வாழ்கையின் இளமைக்காலத்தை கழித்த  மதிப்பிற்குரிய நெல்சன் மன்டேலாவும் கறுப்பர்களை வட அபிரிக்காவில் தூக்கி நிறுத்தியிருக்கிறார்.

நெல்சன் மன்டேலா தலைமையிலான ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்ட காலத்திலும் சரி அவர்களின் அரசியல் முன்னெடுக்கப்பட்ட காலத்திலும் சரி தங்களின் கொடியில் போராட்டத்தின் தன்மையினையும் தங்களின் தனிப்பட்ட ஆளுமையும் பிரதிபலிக்காத வண்ணம் மிகவும் நேர்த்தியாகவே அமைத்திருந்தனர். ஜொன் டூபி(John Dube) உற்பட முன்னால் தலைவர்களின் வழிகாட்டல்களில் அமைந்திருந்த சில அமைப்புக்கள் 1923ம் ஆண்டு ஆபிரிக்க தேசிய காங்கிரஸாக மாற்றம் பெற்று ஒரு விடுதலை இரானுவ அமைப்பாகவே (Umkhonto we Sizwe) “தேசத்தின் ஈட்டி” என்ற பெயரில்  1961ம் மாற்றம் பெற்றிருந்தது.

இவ்வாறான காலப் பகுதியிலும் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதன் பழைய தலைவர்களால் கண்டறியப்பட்ட மூன்று நிறங்களைக் கொண்ட கறுப்பு(மக்களின் நிறம்) பச்சை(வளமிக்க மண்) மஞ்சல் (நாட்டின் செல்வம்) என அப்படியே பேணப்பட்டு வந்தது.

ஆனால் தமிழீழத் தேசிய கொடியை நோக்கினால் அதிலுள்ள மஞ்சல்- நிறம் தமிழீழ தேசிய இனம் தன்னாட்சி அமைத்துக் கொள்ள விழைவதும் நடத்தும் போராட்டம் அறத்தின்பாற்பட்டது நியாயமானது என்பதை குறிப்பதாகவும்

சிகப்பு- தேசியம் அமைத்தால் மட்டும் போதாது தங்களுக்கு எதிரான அனைவரையும் பழிவாங்குவதுடன் சாதிய  வகுப்புவாத முரண்பாடுகள் களையப்பட வேண்டும் என்பதையும்

கறுப்பு- விடுதலைப்பாதை கரடு முரடானது அதில் தலைவரும் அந்த அமைப்பும் செய்யும் தீங்குகளையும் மக்கள் மீது செய்யத் தூண்டிவிடும் தீங்குகளையும் மக்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும் என்பதையும்

வெள்ளை- விடுதலை அமைப்பும் தலைவர்களும் மக்களும் உண்மையையும் நேர்மையையும் கடைப்படிக்க வேண்டும் என்பதையும் குறிக்கின்றது.

அதனால்தானோ என்னவோ! மக்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் வாழ்ந்த காலத்தில் பல சிக்கலான நடைமுறைகளுடன் அடிமைகளைப்போல நடத்தப்பட்டனர். மட்டுமல்லாது புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும் தாயக்திற்கு தமது உறவுகளுடன் சில நாட்களை கழிக்க வந்தபோதுகூட பல சாட்டுப் போக்குகள் சொல்லி சிறையிடப்பட்டு பின்னர் சுளையாக பணம் பறிமாறப்பட்டபோது விடுதலை செய்யப்பட்டனர்.

போதாக்குறைக்கு தமிழீழ தேசிய கொடியில் பிரதிபலிக்கும் வெள்ளை நிறத்தின் கொள்கைக்கு சாட்சியாக வன்னியில் தங்களை மட்டும் நம்பி வாழ்ந்த மக்கள் சிறைப்படிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்படுகின்றனர்.

ஒரு தேசியக் கொடி என்பது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக தாய்நிலத்தில் வாழும் சமூகங்களை பிரதிபலிக்க கூடியதாக இருக்கவேண்டும். ஆனால் புலிகளின் தமிழீழ தேசியக்  கொடியோ நிறத்திலும் அதில் வரையப்பட்டுள்ள இலட்சனையிலும் தனியே புலிகளின் நலனைத்தான் கூறி நிற்கின்றது.

உலகில் எந்த சமூக வரலாற்றிலும் இவ்வகையான போர்குணத்தையும் அடக்கு முறையையும் பிரதிபலிக்கின்ற தேசிய கொடியை காண முடியாது என்பதுடன் அது பிரதிபலிக்கும் தன்மையையும் நிஜத்தில் சொந்த மக்கள் மீது பிரயோகித்துக் காட்டிய பெருமையும் புலிகளையும் அவர்களின் தேசிய கொடியையும் சாரும்.

அதற்கமையவே பிரபாகரன் தன்னை சர்வதிகாரியாக அமைத்துக் கொண்டதற்கான அடயாளமாக அவர்களின் கோஷத்திலும் “புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்” என வைத்து பேனிக்காக்க முற்பட்டுவந்தார். அதற்காகவே புலிகளும் அவர்களின் புலம்பெயர் முகவர்களும் செயற்படுகின்றனர்.

தொன்மைமிகு இலங்கைத் தமிழர் வரலாற்றை நோக்குவேமேயானால் இலங்கை சுதந்திரத்திற்கு முன்னால் பல சுதேச தமிழ் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டிருந்தாலும் அக்காலங்களில் அத்தகைய சுதேச தமிழ் சிங்கள மன்னர்கள் சகல நாடுகளுக்கும் பொதுவான தங்கள் ஆட்சி அதிகாரத்திற்கான சண்டைகள் சிலவற்றில் ஈடுபட்டுள்ளார்களே தவிர அங்கு வாழ்ந்த மக்கள் மிகவும் ஒற்றுமையுடனும் பரஸ்பர நம்பிக்கையுடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.

இத்தகைய ஒற்றுமையை வலியுத்துகின்ற பல வரலாற்றுப் பதிவுகள் இன்று புலிகளின் கையாடல்களால் மறைக்கப்பட்டு அவர்களின் சர்வதிகாரத்திற்கு வாய்ப்பாக திரித்திக் கூறப்படுகின்றது.

இவ்வாறானா இனங்களுக்கிடையிலான ஒற்றுமையின் காரணமாகவே இலங்கையை காலாதிக்கம் செய்த பிரித்தானியா சுதந்திரம் வழங்கும்போதும் பிரித்தானிய முடியரசோ அல்லது இலங்கையின் சுதந்திரப் போராளிகளோ தமிழர்கள் தனியாக வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தவுமில்லை அவ்வாறான தேவையும் அவர்களால் உணரப்படவும் இல்லை.

தற்போது புலிகளால் நடத்தப்படுகின்ற மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுகின்ற பிரச்சாரங்களை கேட்டு புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து கொண்டு சின்னப் பிள்ளைத்தனமான கருத்துக்களை புலிகளின் ஆதரவாளர்கள் கூறும்போது தமிழர் அறிவின்(அறிவிலி) உச்சநிலை உலகின் கண்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னர் இங்கு வாழ்ந்துவருகின்ற தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லீம்கள் என அனைவரும் ஒரு தாய்வயிற்றுப் பிள்ளையாகவே காணப்படுகின்றனர். சில சிங்கள அரசியல் வாதிகளின் இனத்துவேசப்போக்குடன் சில தமிழ் ஏகாதிபத்திய வாதிகளின் சீரற்ற சிந்தனைகளால் தமிழினம் மிகப் பெரும் சீரழிவுக்கு முகம்கொடுத்ததோடு  தற்போது மீண்டு கொண்டிருக்கிறது.

இன்று உலகிலுள்ள அனைத்து ஊடகத் தரப்பாரும் புலிகளுக்கும் அவர்களின் ஆதரவாளர்களுக்கும் துரோகிகளாகிவிட்டனர். அந்த  வரையறைக்குள் லன்டன் பி.பி.சியின் தமிழோசையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. நேற்று புலிகளின் பிரச்சார ஊடக இணையத்தளமொன்றில் “தமிழினத்துரோகி பிபிசி தமிழோசைக்கு ஒரு பகிரங்க கடிதம்” என்ற தலைப்பில் ஒரு கடிதம் எழுதப்பட்டிருந்தது இதன் மூலம் இன்று உலகிலுள்ள சகல நடுநிலையான ஊடகங்களும் புலிகளின் பட்டியலில் இணைக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு துரோகிப்பட்டம் இந்த உலகலாவிய மிகப்பெரிய ஊடகத்துறைக்கு சாட்டுவதன் மூலம் அவர்களுக்கு எந்தத் தீமையுமில்லை அவர்கள் தங்களின் பணியை செவ்வனவே செய்வர் ஆனால் தீமை யாருக்கு என்பதை நான் சொல்லத் தேவையில்லை.

புலிகளையும் அவர்களின் ஆதரவாளர்களையும் பொறுத்தவரை அவர்களின் ஊதுகுழலாக செயற்படுபவை மட்டுமே நடுநிலையான ஊடகம் என அவர்கள் நினைக்கிறார்கள். காரணம் தாங்கள் செய்த ஊழ்வினையால் விளைந்தவற்றை வைத்து மற்றவரைக் குற்றங்காண்பதன் மூலமாகவோ அல்லது கடவுளைக் குற்றம் சொல்வதன் மூலமாகவோ எதுவும் நடக்கப்போவதில்லை. இவைகளை தவிர்த்து அவர்கள் அவர்களாக மாறிக் கொண்டால் அல்லது தங்களின் ஏகாதிபத்தியவாதத்தில் இருந்து இறங்கி வந்தால் எல்லாம் சரியாகிவிடும் என்பதை மட்டும் உணர மறுக்கின்றனர்.

புலிகளின் தாகமும் தமிழர்களின் தாகமும் எப்போதும் வேறான இரு திசைகளிலேயே காணப்பட்டுள்ளது. புலிகளின் ஆயுத அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் யாழ்பாணத்தில், கிழக்கிலென்று பல அரசியல் கட்சிகள் புலிகளை எதிர்த்து வெற்றிவாகை சூடிவந்திருக்கின்றன.

கிழக்கின் விடுவிப்பின்போது அங்கு சென்ற ஜனாதிபதிக்கு மாலை அணிவித்த இந்து மத குருவை புலிகள் சுட்டுக் கொன்றனர். இது எதனைக் காட்டுகிறது எனறால் புலிகள் எவ்வளவுதான் அவர்களின் அடாவடித்தனங்களை பாமர மக்கள் மீது பிரயோகித்தும் சகோதர படுகொலைகள் புரிந்தும் இன்னும் மக்கள் மனதார புலிகளை ஆதரிக்கவில்லை என்பதையும் அவர்கள் அமைதியான சுபீட்சமான வாழ்வையே விரும்புகின்றனர் என்பதையுமே காட்டுகிறது.

அல்பிரட் துரையப்பா முதல் இன்று சிறைபிடித்து சுட்டுக்கெல்லப்படுகின்ற வன்னி பாமர மக்கள்வரை அனைவர் மீதும்  புலிகள் தொடர்ந்து தங்கள் ஆயுதகங்கால் மட்டும் தமிழ் மக்களை ஆண்டு வந்திருப்பது புலிகளின் தாகம் தமிழரின் தாகமல்ல என்பதையே எடுத்துக் காட்டுகின்றது.

புலிகளின் தாகமே மக்களின் தாகமாகவும் இருந்திருப்பின் இலங்கை இராணுவம் புலிகளை நோக்கி முன்னேரும் போது மக்கள் இராணுவத்தை எதிர்த்து அணிதிரண்டு அரணாக நின்றிருப்பரே தவிர இராணுவத்திடமும் சர்வதேசத்திடமும் தங்களை புலிகளின் பிடியிலிருந்து காப்பாற்றும்படி  கோரியிருக்க மாட்டார்கள்.

இலன்டனில், பிரான்ஸில்,நோர்வேயில், கனடாவில் என புலம்பெயர் தேசங்களில் வீதிமரியல்கள் செய்வதைவிட புலிகளுடன் மக்களிருந்திருந்தாள் இலங்கை இராணுவத்திற்கு எதிராக இலங்கையிலும் வன்னிலும் வீதிமறியல்  மக்கள் செய்திருப்பர் அவ்வாறு செய்திருப்பின் நிச்சயம் இலங்கை அரசு அடிபணியவேண்டிவந்திருக்கும்.

புலிகளின் வால்களுக்கு தெரியாத ஒன்று இலங்கை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் தெரியும் அதுதான் தமிழ் மக்கள் புலிகளை ஆதரிக்கவில்லை என்பது. அதனால்தான் பெயரளவாயினும் ஒரு சமாதான சூழலை கிழக்கில் அரசால் உருவாக்க முடிந்துள்ளது. இல்லையேல் இவ்வளவு உயிரிழப்புக்களுடன் சொந்த பந்தங்களைப் பிரிந்து வடக்கிலும் கிழக்கிலும் அகதியாக மக்கள் வாழாமல் ஒன்றாக இணைந்து அரசுக்கு எதிராகவும் அவர்களின் இராணுவ நடவடிக்கு எதிராகவும் அரண் அமைத்திருப்பின் இலங்கை இராணுவம் ஒரு அங்குலம் கூட நகர்திருக்க முடியாது என்பதே உண்மை.

புலிகள் தங்கள் மக்கள்மீதும் தமிழ் பேசும் சமூகத்தார்மீதும் மற்றும் சகோதர போராட்ட குழுக்கள் அரசியல் தலைவர்கள் புத்திசாலிகள் கூட வாழ்ந்த முஸ்லீம் சமூகத்தினர் உட்பட சகல தரப்பார்மீதும் தங்கள் ஆயுத வன்முறையை கட்டவிழுத்து விட்டு அராஜகமாக உயிர்களைக் கொன்று, தூக்கத்திலிருந்த சிங்கள, முஸ்லீம் மக்களை  கொலை செய்து சிறார்களை வெட்டிக் கொலை செய்து பெற்ற தாயின் வயிறு பத பதக்க பிள்ளைகளை பிடித்துச் சென்று பலியாக்கிய பாவத்திற்கான பிரதிபலனே இன்று அவர்கள் அனுபவிப்பதாகும். இதில் விதியையும் கடவுளையும் நொந்துகொள்வதில் எவ்வித பயனுமில்லை

தமிழ்பேசும தரப்பாரது தேவையென்பது எப்போதும் புலிகளின் பாசிச தேவையிலிருந்து வேறுபட்டிருந்திருக்கிறது. 2004ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கச் சொன்ன புலிகள் மக்கள் அவர்களை ஆதரிக்க மாட்டார்கள் என்று தெரிந்தே அன்றிரவு வீதிகளின் துப்பாக்கிகளால் சத்தவேட்டுகளை தீர்த்து மக்களை பயமுறுத்தினர். மட்டுமல்லாது அதையும் மீறி வாக்களித்த ஒரு வாக்காளரின் கையையும் வெட்டி தங்களின் இறுதி தலைவிதியை நிர்ணயித்துக் கொண்டனர்.

தற்போது புலிகள் முற்றாகத் தோல்வியுற்ற நிலையில் இறுதி முயற்சியாக வன்னியில் அவர்களால் கட்டாயமாக ஆட்சேர்ப்புக்கு உள்ளாகப்பட்டு பலிகொடுக்கப்பட்ட பிள்ளைகளின் குடும்பத்தினரையும் மற்றும் புலிகளின் தலைமைபீடத்துக்கு விசுவாசமான குடும்பங்களையும் இணைத்து நாங்கள் அனைவரும் மாவீர்ர் குடும்பத்தினர் எங்களுக்கு அரச கட்டுப்பாட்டில் பாதுகாப்பில்லை ஆகவே சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் போன்றவற்றின் வழித்துணையுடன் தாங்கள் வேறு நாடுகளில் தஞ்சம் புக வழிவிடப்படவேண்டும் என்று மக்களின் பெயரால்  கோரிக்கை விடுத்து புலிகளின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தப்பிக்க முயற்சிப்பார்கள் போலத் தெரிகிறது.

காரணம் அத்தகைய சூழலில் புலிகளுக்கு பாமரமக்களின் உயிர்கள் பற்றி எந்தக் கவலையும் இல்லாததினால் யாரை பலிகொடுத்தேனும் தாங்கள் தப்பிக்க முயற்சிக்கின்றனர். இதற்கு நிச்சயம் புலிகளின் சில முக்கிய உறுப்பினர்களின் குடும்பத்தவர்களை தவிர எவரும் இணங்கப்போவதில்லை.

சர்வதிகாரி கிட்லர் தன்னைத்தான் சுட்டு மாய்த்துக் கொண்டபோதுகூட அவருடன் கூடயிருந்த சில சகாக்கள் குடும்பங்களுடன் தங்களை மாய்த்துக் கொண்டனர் அதற்க்கு அவர்கள் கிட்லர் இல்லாத உலகில் தாங்கள் வாழ விரும்பவில்லை என்று இறுதியாக கூறியிருந்தனர். இந்த சம்பவமும் மீண்டும் ஒரு முறை உலக வரலாற்றில் வன்னியில் நிகழும்போல் தெரிகிறது. இதையும்  புலம்பெயர் புலிகள் இலங்கை அரசின் கொடுமையென கணக்குக் காட்டலாம்.

இவ்வாறு புலிகளின் சுகபோகத்தை அனுபவித்த விசுவாசிகளைத் தவிர எந்த மக்களும் இன்று புலிகளுடனில்லை அவர்கள் அனைவரும் எஞ்சியிருக்கும் தங்களின் உயிர்களைப் பாதுகாப்பதில் மட்டுமே அக்கறைப்படுவதை காணமுடிகிறது.

இந்த சம்பங்களை உன்னிப்பாக அவதானித்து சிந்திப்பீர்களானால் புலிகள் என்றும் மக்களின் மனங்களின் இடம் பிடித்திருக்கவில்லை என்பதும் அவர்கள் செய்த ஊழ்வினை அவர்களை சூழ்ந்துள்ளதையும் காண்பீர்கள்.

மக்களின் ஜனநாயகரீதியான சுதந்திரப் போக்கை நேசிக்க புலிகளோ சர்வதிகார சுயாட்சிப்போக்கை கடைபிடித்தே வந்துள்ளனர்.  எனவே எப்போதும் புலிகளின் விருப்பு மக்களின் விருப்பாக ஈழத்தின் வரலாற்றில் இருந்ததில்லை.

“சமூக அநீதிகளை விதைத்த காலம் கடந்த காலத்துக்கு உரியது! சமூக நீதியைக் கட்டியெழுப்புகின்றவர்களுக்கே எதிர்காலம் உரியது!” -மேதகு ஜனாதிபதி. மகிந்த ராஜபக்ச சுதந்திர தின உரை 2009-