This is a free and fully standards compliant Blogger template created by Templates Block. You can use it for your personal and commercial projects without any restrictions. The only stipulation to the use of this free template is that the links appearing in the footer remain intact. Beyond that, simply enjoy and have fun with it!

19 நவம்பர், 2009

அந்தக் கொள்ளைக்குச் சாட்சியில்லை



“நான் மன ஊடூடாப் பிச்சையெடுத்து ஒவ்வொறு வெள்ளிக்கிழமையும் சேர்ர காச சிலிங்கோ வங்கிலதான் போட்ட. என்ட கஷ்டத்துக்குள்ள இரிக்கிறத்துக்கு ஊடுமில்ல.ஒரு குடிலக் கட்டுவம் என்டும் அதோட என்ட மையத்த (பிணத்தை) அடக்க மத்தாக்களக் கஷ்டப்படுத்தப் போடாண்டுதான் இந்தக் காச நான் சேர்த்து வந்த..மொத்தமா கடசியா என்ட கணக்கில 78,086.93 சதம் நான் வெயிலுக்குள்ள அலஞ்சி திரிஞ்சி சேர்த்த காசி இருந்திச்சி. இந்தக் காசச் சேர்க்க நான் பட்ட பாடு அல்லாஹ் ஒருத்தனுக்குத்தான் தெரியும். இப்ப என்னடான்டா வங்கியே இல்ல, இதுல சட்ட நியாயமில்லையா? இப்பிடி ஏழைகள்ற காச எடுத்தவனுகளுக்குப்  புள்ள குட்டிகள் இல்லையா? பரம்பரைக்கும் அல்லாட சாபம் எறங்கும் இவனுகளுக்கு....... அல்லா ஒருத்தன் இரிக்கான்.......... அவன் பார்த்துக்குவான்” –அவ்வா உம்மா-

17 அக்டோபர், 2009

அக்கினி இடித் தாக்கம்

அக்கினி இடித் தாக்கம் 
அசுர வல்லமை ஊக்கம்
அப்படிப்
பொறுமை யற்ற புயலினிலே
புதுநெறி படைக்க வேண்டி
புறப்படும் எமது கனவுகள்.

இன்று டாக்டர், பாரத ரத்னா, பாரத விபுசன், ராக்கெட் பிதாமகன், கவிஞர், அனு விஞ்ஞானி அபுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாமுக்கு எழுபத்தெட்டாவது பிறந்த தினம்.

(இன்று உலக மக்கள் தங்கள்  கைகளை கழுவும் தினமும் கூட உலக சுகாதார ஸ்தாபனத்தின் தகவல்படி ஆண்டுக்கு 35 இலட்சம் குழந்தைகள் தங்கள் ஐந்தாவது பிறந்த தினம்வரை உயிருடன் வாழ்வதில்லை இந்தக் குழந்தைகள் வயிற்றொட்டம் மற்றும் நிமோனியா போன்றவற்றால் இறந்து விடுகின்றன காரணம் சாப்பிடு முன்பும் மற்றும் மலம் கழித்த பின்னரும் நன்றாக கைகளை சவர்காரத்தால் கழுவாமையாளாகும் என்கிறது அந்த நிறுவனம்.)

27 செப்டம்பர், 2009

வெளுக்கிறது கிழக்கு.!

உயிர்களை உருவாக்கும் பூமி
உயிராக இருக்கும் காற்று
மனிதனை உயிர் வாழச்செய்யும் மரங்கள்!
அந்த மரங்களுக்குள் ஒரு தீவு
அதுவே எம் தாய்பூமி

அன்பைக் காட்டுவதிலும் சரி அடித்துக் காட்டுவதிலும் சரி அதிக துணிச்சல்காரர்கள் பிறப்பெடுக்கும் பூமியும் இதுவே இயற்கை தன் அழகையெல்லாம் இத்தீவில் கொட்டியிருப்பதைப்போலவே பஞ்ச பூதங்களின் குணங்களும் இங்கு வாழ்பவர்களிடம் அப்படியே காணப்படுகின்றது.

ஆச்சரியக்குறிகள், கேள்விக்குறிகள், வியப்புக்குறிகள் என பலதரப்பட்ட வாழ்கையின் வடிவங்கள் இம்மக்களின் வாழ்கையாக இருக்கிறது. ஒவ்வொறு சிங்களக் குடிமகனின் வீட்டிலும் ஆகக்குறைந்தது ஒரு இராணுவ சிப்பாயின் புகைப்படத்திற்காவது மரியாதை செலுத்தப்படுகிறது. ஒவ்வொறு தமிழ் மகனின் வீட்டிலும் அடயாளம் தெரியாமல் மறைந்துபோன ஒரு உறவுக்காவது அஞ்சலி செலுத்தப்படுகிறது. ஒவ்வொறு முஸ்லிமின் விட்டிலும் ஒரு விதவை கனவனை நினைத்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறாள். என்றாலும் இவர்களின் கண்களில் என்றுமில்லாதவாறு ஏதோ ஒரு நம்பிக்கையுடன் கவலை கலப்பில்லாத ஒரு சிரிப்பும் அவ்வப்போது வந்து மறைகின்றது.

18 ஜூன், 2009

துரோகி, இனவாதி, எட்டப்பன்!

எழுதிப் படிச்சு அறியாதவன்தான் 

உழுது ஒளச்சு சோறு போடுறான்!. 

எல்லாம் படிச்சவன் ஏதேதோ பேசி 

நல்ல நாட்டைக் கூறு போடுகிறான்!

இவன் - சோறு போடுறான்
அவன்-  கூறு போடுறான்...!' (பட்டுக்கோட்டையார்)

புலி எனும் எலி கிலி பிடித்து வீழ்ந்தவுடன் விழி பிதுங்கிய புலம்பெயர் புலிக் கூட்டம் இன்று சனி பிடித்து கிறுக்குடன் அலைகிறது

முன்னொரு காலத்தில் முருங்கமரக் காட்டுக்குள் வாழ்ந்து வந்த புலிகளுக்கு பல பிரச்சார ஊடகங்கள் இருந்தன இன்றும் அவை இருக்கின்றன. அவர்களுக்கு அந்தக் காலத்தில் செய்திகள் எழுதுவதற்கும், ஆராச்சிகள் செய்வதற்கும், ஆய்வுகள் நடாத்துவதற்கும், ஒரு விடயம் இருந்தது அதுதான் புலிகள். அதுகள் எலியாக மடிந்த பின்னர் தற்போது எழுதவோ அல்லது விவாதிக்கவோ வார்தையோ அல்லது வாதமோ இல்லாமல் போனதால் பட்டங்கள் வழங்குவதில் பல்கலைக்கழகங்களாக அவைகளும் அதன் விசுவாசிகளும் கிளம்பியுள்ளனர். அந்தப் பட்டங்கள் மூன்றுவகை ஒன்று “துரோகி” இரண்டாவது “இனவாதி” மூன்றாவது “எட்டப்பன்”.

வஞ்சிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான் வலி எங்களுக்குத்தான் தெரியும்! -கிழக்கான் ஆதம்-

தான்டி வந்தேன் கடலை!, வாங்குவேன் உன் உடலை!, அணிவேன் மலையாய் - உன் குடலை!, அனுப்புவேன் சுடலை, - ஆனால் என்- முருகன் கட்டளை இடலை!, அதனால் நான் உன்னைத் தொடலை!

பழைய படமொன்றில் நடிகர் சிவாஜி கணேசன் பேசிய வரிகள் இவை இன்றைய நாட்களில் பல சூடான கருத்தாடல்கள் எமது இணையத்தளங்கள் குறித்தும் எழுத்தாளர்கள் குறித்தும் புலிகளின் ஆதரவாளர்களினால் முன்வைக்கப்படுகின்றன. என்றும் இவைகளைக் கண்டு நாங்கள் சளைக்கப்போவதில்லை. காரணம் இவர்களை விட சூடும் கோபமும் இவர்களைக் குறித்தும் புலிகளைக் குறித்தும் நியாயமாக எமக்குத்தான் எழ வேண்டும். காரணம் இவர்களால் வாழ்கையை இழந்தவர்கள் நாங்கள்தான்! இன்றைய இளைஞர்கள்.

30 மே, 2009

குடுமிபிடிச் சண்டை ஆரம்பம்.


சீமை அழியுதுண்ணு நான்
சிந்தையிலும் எண்ணலியே!,
சீமை அழியலியே-என்
சிறப்பழிஞ்ச மாயமென்ன?
மருத அழியுதுண்ணு நான்
மனசிலேயும் எண்ணலியே!
மருத அழியலியே-என்
மதிப்பழிஞ்ச மாயமென்ன? (நாட்டார் பாடல்)

இந்த மாதம் பதினேழாம் திகதி புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் அவரது சகாக்களான அரசியல் பொறுப்பாளர் பா. நடேசன், சூசை, புலித்தேவன், இளந்திரயன் உற்பட சகல முதல்மட்ட மற்றும் இரண்டாம் மட்டத் தலைவர்களும் இலங்கையின் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளர் பொட்டு அம்மான் காணாமல்போயிருக்க பிரபாகரனின் மகன் சால்ஸ் அன்டனியும் கொல்லப்பட்டிருந்தார்.

19 மே, 2009

தலைவருக்கு வீர வணக்கம்! படையினருக்கு நன்றிகள்! ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்! -கிழக்கான் ஆதம்-

ஈழ மக்களின் போராட்ட வரலாற்றை திசைதிருப்பிய மாபெரும் மனிதர் சில தினங்களுக்கு முன் தனது முடிவை நிரூணயித்துக் கொண்டார். தனியாக தமிழருக்கு நாடு பெற்றுத் தருவதாக கூறிய இவர் இன்று தமிழர்களுக்கு உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் அகதி அந்தஸ்தை பெற்றுக் கொடுத்து நடைபிணங்களாக அவர்களை மாற்றிவிட்டு போராடி உயிர்நீத்தார்.

வீரவணக்கம்
படுகொலைக் கலாச்சாரத்தை தமிழருக்குள் விதைத்து இன முரண்பாடுகளைத் தூண்டி இலங்கை மக்களை தமிழர் சிங்களவர் முஸ்லீம்கள் என பாகுபடுத்தி  பேதமேற்படுத்திய ஜனநாயகவாதிக்கு வீரவணக்கம்.
வாசலில் மண்கூட்டி நேசத்துடன் கைகோர்த்து பாசத்துடன் பழகிய சின்னம் சிறுசுகளை இரத்த வாசத்துடன் இறுகிய உள்ளத்துடன் இயங்கவைத்துக் கொண்டிருந்த இயந்திர துப்பாக்கிதாரிக்கு எங்கள் வீரவணக்கம்